அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எலான் மஸ்க்கை பார்த்து கடுப்பாகி கத்திய டிரம்ப்
நியூயார்க்: சமீபத்தில் பென்டகன் அமைப்பின் சில போர் ரகசியங்கள் கசிந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுடன் அமெரிக்கா போர் செய்வதாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று DOGE தலைவர் எலான் மஸ்க்கிடம் விளக்கப்பட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பென்டகன் சம்பவம்
பென்டகன் உடன் கடந்த மாதம் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதே சமயம் சீனா உடன் போர் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பென்டகன் ஆலோசனை நடத்துவதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனை செய்யலாம் என்றும் மஸ்க் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை டிரம்ப் மறுத்தார். இந்த விவகாரம் பெரிதானதும் அலறியடித்து பதில் சொன்ன டிரம்ப்.. அப்படி ஆலோசனை நடக்கவில்லை என்று கூறி இருந்தார். அதே சமயம் பென்டகன் அளித்த விளக்கத்தில் பென்டகன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் போர் பற்றி எல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
உண்மையில் நடந்தது
இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனா உடன் போர் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டு டிரம்ப் அதிர்ச்சி அடைந்ததாகவும்.. இனிமேல் மஸ்க்கிடம் இது போன்ற விவரங்களை விவாதிக்க கூடாது.. அங்கே அவருக்கு என்ன வேலை.. நீங்கள் அவரிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்றும் டிரம்ப் பென்டகன் அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பென்டகன் அதிகாரிகளான டான் கால்டுவெல் மற்றும் டேரின் செல்னிக் ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிஐஏ பின்னணி
DOGE தலைவர் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக சிஐஏ அமைப்புடன் நெருக்கமாக மாறி வருகிறார். கிட்டத்தட்ட சிஐஏ அமைப்பின் செல்லப்பிள்ளையாக அவர் மாறிவிட்டார். அமெரிக்காவில் யார் அதிபராக இருந்தாலும் சிஐஏதான் ஆட்சி செய்கிறது என்ற வாதம் உள்ளது.
சிஐஏ கட்டுப்பாட்டில்தான் deepstate உள்ளது. அவர்கள்தான் உலக அரசியலை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற வாதம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எலான் மஸ்க் சிஐஏவிற்கு நெருக்கம் ஆகி உள்ளார். அங்கே அவர் நீண்ட நேரம் ஆலோசனைகளை செய்தார். அரசின் தற்காலிக பதவியில் இருக்கும் ஒருவர் அமெரிக்காவின் உயரிய சிஐஏ அமைப்பில் என்ன ஆலோசனைகளை செய்கிறார் என்ற பரபரப்பு உலக அளவில் ஏற்பட்டு உள்ளது. அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.. அதோடு மூர்க்கமாக முடிவுகளை எடுக்க கூடியவர். அப்படிப்பட்டவர் சிஐஏ அலுவலகத்தில் என்ன செய்கிறார் என்ற கேள்வி.. விவாதம் எழுந்துள்ளது.
மஸ்க் பதவி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.
முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.
இந்த பொறுப்பு ஏன் முக்கியம்
அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில்.. தேவையற்ற நேரம், பணம் வீணாவதை தடுக்கும் விதமாகவும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இவர் பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக பங்கேற்பார். அரசின் நேரடி துறை இது என்றாலும்.. இது நியமன துறைதான். அரசின் அதிகாரபூர்வ துறை கிடையாது. ஆனாலும் மஸ்க்கிற்கு பெரிய பவர் அளிக்கப்பட்டு உள்ளது.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
SpaceX: நினைச்சதொன்னு, நடந்ததொன்னு.. எலான் மஸ்க்-கிற்கே ஆனந்த கண்ணீர் வரவைத்த சம்பவம்! -
யாரு சாமி நீ.. 10479733000000 ரூபாய்.. எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு.. உலகின் முதல் Trillionaire! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications