உச்சாணிக்கு போன ஆளுநர் ரவி.. ஊட்டி தொட்டாபெட்டா ரோட்டில் திடீர்னு இடறி விழப்போயிட்டாரு.. அந்த "ஷூ"
ஊட்டி: தமிழக ஆளுநர் நீலகிரிக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவர் இயற்கை அழகை கண்டு ரசித்துள்ளார். இதுகுறித்த போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார்.. இதையடுத்து, நேற்றைய தினம் ஊட்டி தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்த ஆளுநருக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து வரவேற்றனர்.

டான்ஸ்: தோடர் இன மக்களின் பாரம்பரிய குல தெய்வக் கோவிலை பார்வையிட்டு, அதன் வழிபாட்டு முறைகளை கேட்டறிந்தார் ஆளுநர். பிறகு, அங்கிருந்த தோடர் பழங்குடியின இளைஞர்கள், இளவட்ட கல்லை ஆளுநர் முன்பு தூக்கி அசத்திவிட்டார்கள்..
பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.. மேலும், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை பார்வையிட்ட ஆளுநர், பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
தொட்டபெட்டா: இன்றைய தினம், தொட்டபெட்டா சிகரத்தை கண்டுகளித்தார் ஆளுநர்.. மனைவி லட்சுமி மற்றும் தன்னுடைய உறவினர்களுடன் நாட்டின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்தார். அங்கிருக்கும் தொலைநோக்கி மூலம் சீகூர், குன்னூர், மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்குகள், ஊட்டி நகரம் என அனைத்தையும் கண்டு ரசித்தனர்.
காட்சி முனை என்று சொல்லக்கூடிய வியூ பாயின்ட் பகுதிக்கு சென்றார் ஆளுநர்.. அப்போது அங்கிருந்த பாறைகள் மீது நடக்கும்போது, திடீரென அவரது ஷூ வழுக்கிவிட்டதால், லேசாக நிலை தடுமாறினார். ஆனாலும் உடனடியாக சுதாரித்து கொண்டார்... பிறகு, குடும்பத்தினரிடம், தன்னுடைய ஷூவை காண்பித்து, "இனிமேல் பாறைகள் மீது ஏறும்போது இப்படியெல்லாம் ஷூ போடக்கூடாது" என்றார்..
வியூ பாயின்ட்: சிறிது நேரம் அங்கு வியூ பாயிண்ட்களை, பைனாகுலர்களில் பார்த்து ரசிதுவிட்டு, தொட்டபெட்டாவில் ஒரு டீயையும் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் ஆளுநர்.

முன்னதாக, ஆளுநர் தொட்டபெட்டா வரப்போகிறார் என்றதுமே, தொட்டபெட்டா ரோட்டில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சிறிது நேரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.. அதற்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.. நாளைக்கு தேயிலை பூங்காவுக்கு சென்று பார்வையிட போகிறார் ஆளுநர். டீ எஸ்டேட்டை பார்த்து முடித்ததுமே சென்னைக்கு திரும்புகிறார்.
காட்சி முனை என்று சொல்லக்கூடிய வியூ பாயின்ட் பகுதிக்கு சென்றார் ஆளுநர்.. அப்போது அங்கிருந்த பாறைகள் மீது நடக்கும்போது, திடீரென அவரது ஷூ வழுக்கிவிட்டதால், லேசாக நிலை தடுமாறினார். உடனடியாக சுதாரித்து கொண்ட ஆளுநரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கெட்டியாக பிடித்து கொண்டனர். பிறகு குடும்பத்தினரிடம், தன்னுடைய ஷூவை காண்பித்து, "இனிமேல் பாறைகள் மீது ஏறும்போது இப்படியெல்லாம் ஷூ போட்டுட்டு வரக்கூடாது" என்றார்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications