கூடலூர்-சிறியூர்- தெங்குமரஹாடா-சத்தியமங்கலம் சாலை.. நீலகிரி எதிர்பார்க்கும் மிகப்பெரிய திட்டம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து சிறியூர், தெங்குமரஹாடா, சத்தியமங்கலம் வழியாக சாலை அமைத்தால், கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். மேலும் கூடலூர், பந்தலூர் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள்களும் எளிதாக கிடைக்கும் என்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சமவெளி பகுதி என்றால் அது தெங்குமரஹாடா தான்.. இங்கு செல்ல நீலகிரி மாவட்டத்தில் இருந்து நேரடியாக சாலை வசதிகள் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானிசாகர் வழியாக வந்து தான் தெங்குமரஹாடா செல்ல முடியும். தெங்குமரஹாடா பகுதியை பொறுத்தவரை அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றை கடந்து உள்ளது. நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வரும் பகுதியாகும்.. இந்த பகுதியில் சாலைவசதிகள் கிடையாது. நேரடியாக சிறியூரை இணைத்து அதன் பிறகு கூடலூரையும் இணைக்க முடியும் என்றாலும், அடர்ந்த வனப்பகுதியாகும்..இதுதான் சிக்கலுக்கு காரணமாக உள்ளது. அதேநேரம் இந்த சாலை குறித்து கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பந்தலூர் தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை துணை பொதுச்செயலாளர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்பட தமிழகத்தின் சமவெளி பகுதிகளுக்கு செல்ல தற்போது ஊட்டி, குன்னூர் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். மழைகாலங்களில் இந்த சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.
அப்போது சென்னைக்கு பெங்களூர் வழியாகவும், கோவைக்கு கேரளா மாநிலம் நிலம்பூர், பெருந்தல்மன்னா, பாலக்காடு வழியாகவும் செல்லும் நிலை உள்ளது. மேலும் அப்போது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. மலைப்பாதையின் வழியாக ஏறி இறங்கி செல்வதால் லாரிகளின் வாடகையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தெங்குமரஹாடா, சிறியூர், சத்தியமங்கலம் வழியாக சாலை அமைத்தால் கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். மேலும் கூடலூர், பந்தலூர் பகுதிமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள்களும் எளிதாக கிடைக்கும். விலை வாசியும் குறையும். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications