நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்கூபா டைவிங் ரெடி".. நீலகிரியை விடாமல் மிரட்டும் பேய் மழை.. அதிரடியை கையில் எடுத்த சைலேந்திரபாபு

3 நாட்கள் கனமான மழை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது

Google Oneindia Tamil News

ஊட்டி: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழை விடாமல் பெய்து வருகிறது.. கடந்த 3 நாட்களாகவே இந்த மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது... இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

அரபிகடலில் டவ்-தே புயல் உருவாகி உள்ளது.. இந்த புயல் எதிரொலியாக, கேரளா உட்பட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரலாக பெய்கிறது.
இந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 2536 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

 பாதிப்புகள்

பாதிப்புகள்

ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை அதிகமாக இருந்தாலும், பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஊட்டி - கூடலூர் சாலையில் 8வது மைல் அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் நேற்று விழுந்துள்ளது.. ஆனால், நேற்று பொதுலாக்டவுன் என்பதால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.. சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 தீயணைப்பு துறை

தீயணைப்பு துறை

இரவு - பகல் என விடாமல் மழை பெய்ததால், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.. இதையடுத்து, பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கூடலூரில் தயார் நிலையில் உள்ளனர்.. இதுபோக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.

 வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

வழக்கமாக, மழைப்பொழிவு அதிகமாக இருந்தால், கூடலூரில் உள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும்.. அந்த வகையில், இப்போதும், தீயணைப்பு துறை ஊட்டியில் தயாராக உள்ளது.. இயக்குநர் சைலேந்திரபாபு முழு முயற்சியில் இதற்கான துரித நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

சென்னை

சென்னை

நீலகிரி மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்பதால், சென்னையில் இருந்து ஆழ்கடல் நீந்துதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி பெற்ற, "ஸ்கூபா டைவிங்" மீட்புக்குழுவினர் 40 பேர் வந்துள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில், நவீன கருவிகள் மற்றும் சிறப்பு தளவாடங்களுடன் எந்நேரமும் செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.. ஊட்டியில் மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், மின்தடையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது..!

English summary
Heavy rain in Nilgiris District and received 2536 mm of rainfall due to Dow De
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X