நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: கொட்டி வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.
இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கூடலூரில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 செமீ அளவிற்கு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்தது.
கனமழை காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100 கன அடியாக உள்ளது. இதை அடுத்து சோலையார் அணை 165 அடிக்கு 164 அடி நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7100 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070 கனடியாகவும், சேடல் பகுதி வழியாக 4400 கன அடியாகவும், மொத்தம் 5470 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications