நீலகிரியில் SP ஆபீசுக்கு தெறித்து ஓடிய பெண் இன்ஸ்பெக்டர்.. புகாரில் ஆளை பார்த்ததுமே ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: வேலியே பயிரை மேய்ந்த காரியத்தைதான் முருகன் செய்திருக்கிறார்.. காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர், கீழ்த்தரமான செயல்களை செய்திருப்பதாக வந்த புகார் மிகப்பெரிய அதிர்ச்சியை நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. யார் இந்த முருகன் தெரியுமா?

காவல்துறை பொதுமக்களின் புகார் மட்டுமல்லாமல் துறைரீதியான புகார்களையும் விசாரித்து உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது..

Nilgiris SP Office Female Inspector

சமீபத்தில்கூட விருதுநகரில் அப்படியொரு அதிரடி மேற்கோள்ளப்பட்டது.. விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பண விவகாரம் தொடர்பாக இளம்பெண் ஒருவர் புகார் கொடுப்பதற்காக வந்துள்ளார்...


விருதுநகர் போலீஸ்

இந்த புகாரின்பேரில் அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடந்தது.. இதற்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக அடிக்கடி ஸ்டேஷனுக்கு அப்பெண் வந்து சென்றுள்ளார். அப்போது ஏட்டாக வேலை பார்க்கும் ஜெயபாண்டிக்கும், அப்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, ஆமத்தூர் அருகே வீட்டில் அந்த பெண்ணும், ஏட்டுவும் தனிமையில் இருந்துள்ளனர்.. இதை அந்த பெண்ணின் கணவரே நேரில் பார்த்து ஏட்டுவை கையும் களவுமாக பிடித்தார்.. எனினும் ஏட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த ஆத்திரத்தில் ஏட்டுவின் டூவீலரை கணவரும், அந்த பகுதி மக்களும் சேர்ந்து சேதப்படுத்தினர்.

உல்லாசம் - கணவரிடம் சிக்கினார்

அத்துடன், சம்பந்தப்பட்ட ஏட்டு மீது பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏட்டுவை தற்காலிகமாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்... மேலும் இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று, ஜெயபாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதே போல் விருதுநகர் சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் டிரைவராக வேலை பார்ப்பவர் ஜெயச்சந்திரன்.. இவருக்கும் பாண்டியன் நகர் (ஊரக) காவல் நிலையத்தில் பணியாற்றும் ஜெயக்கொடி என்ற பெண் போலீசுக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது.

ஒருகட்டத்தில் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர், சூலக்கரை ஸ்டேஷனுக்கு சென்று , ஜெயச்சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. அத்துடன், அந்த போலீஸ் ஸ்டேஷனையே அமளி துமளி செய்துவிட்டார்.. இதையடுத்து, ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்கொடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர்.

நீலகிரி மாவட்ட எஸ்பி ஆபீஸ்

இப்போது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன்.. இவருக்கு 45 வயதாகிறது.. கடந்த 2 வருடங்களாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

அதாவது போலீசாரின் பயணப்படிக்கான வவுச்சர் ஒப்புதல் செய்து பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வருகிறார்..

பெண் இன்ஸ்பெக்டர்

அப்படித்தான், நீலகிரி மாவட்டத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தரக்கோரி, முருகனிடம் விண்ணப்பத்துடன் வவுச்சர் தந்துள்ளார்.. கூடுதல் விவரங்களுக்கு தன்னுடைய செல்போன் நம்பரையும் விண்ணப்பத்தில் பதிவு செய்திருந்தார்.

உடனே அந்த செல்போன் நம்பரை குறித்து வைத்து கொண்ட முருகன், தினந்தோறும் குட்மார்னிங், குட்நைட் என்று மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்..

திடீரென புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்ததை பெண் இன்ஸ்பெக்டர் கவனித்துள்ளார்.. எனினும் குட்மார்னிங், குட்நைட் மெசேஜ் என்பதாலும், புது நம்பர் என்பதாலும் எந்த பதிலும் தராமல் விட்டுவிட்டார்..

காவல் கண்காணிப்பாளர் ஆபீஸ் முருகன்

ஆனால் சில வாரங்களிலேயே பெண் இன்ஸ்பெக்டரின் போனுக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை முருகன் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர், உடனடியாக இதுகுறித்து ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே வேலை பார்க்கும் முருகன் என்பது தெரியவந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+