ஆ.ராசா நீலகிரி திமுக வேட்பாளர்: புகுந்த வீட்டில் மீண்டும் தன் செல்வாக்கை நிரூபிப்பாரா?
நீலகிரி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் ஆ.ராசா.
நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஆ.ராசா (55). வழக்கறிஞரான இவர் கடந்த 1996, 99 மற்றும் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரம்பலூர் தனி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்தார்.

2009ம் ஆண்டு நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த ராசா, மீண்டும் 2014ல் அதே தொகுதியில் களமிறங்கினார். ஆனால் அப்போது அவரால் அங்கு வெற்றி பெற இயலவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கொள்கைப் பரப்பு செயலாளரான ராசா, மத்திய இணை அமைச்சர் மற்றும் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
அதிகபட்சமாக தேசிய கட்சியான காங்கிரஸ் நீலகிரி மக்களவைத் தேர்தலில் 7 முறை வெற்றிப் பெற்றுள்ளது. பா.ஜ.க, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 2 முறைகள் இந்தத் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.
திமுக சார்பில் நீலகிரி தொகுதியில் 3-வது முறையாகவும், மக்களவைத் தேர்தலில் 7-வது முறையாக ஆ.ராசா போட்டியிடுகிறார். பெரம்பலூர் எனக்குப் பிறந்த வீடு நீலகிரி எனக்கு புகுந்த வீடு என தன் பிரச்சாரத்தில் ராசா கூறியுள்ளார். புகுந்த வீட்டில் தன் செல்வாக்கை ராசா நிரூபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications