மது போதையில் ஆடை இல்லாமல் அடுத்தவர் வீட்டிற்குள் புகுந்த அதிமுக EX எம்பிக்கு அடி உதை?
ஊட்டி: மதுபோதையில் வேறு ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி, உதை விழுந்ததாக தகவல்கள் வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி யாக கோபால கிருஷ்ணன் இருந்தார். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் மது பார்ட்டியில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் குடித்துவிட்டு இரவு நேரத்தில் முத்தாலம்மன்பேட்டை பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பதறினர். பின்னர் அந்த வீட்டின் உரிமையாளர் அவரை தாக்கியதாக தெரிகிறது.

அதிமுக முன்னாள் எம்பி
பின்னர் அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளர் கோபி என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மதுபோதையில் வீடு புகுந்தது மட்டுமல்லாமல் கோபியை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியதாக அதிமுக முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அடுத்தவர் வீடு
அதிமுக முன்னாள் எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் நீலகிரி அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுபானம் குடித்தால் எந்த அளவுக்கு நம் சிறு மூளையை மழுங்கடிக்கிறது என்பதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. மது போதையால் கொலை, கொள்ளை, பலாத்காரம், தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

மது போதை
இந்த மது போதையால் நிறைய குடும்பங்கள் சீரழிகின்றன. இதனால்தான் மது விலக்கு வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் தலைதூக்கும் . இதனால் நிறைய உயிர்கள் பலியாகக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு மது விலக்கை அமல்படுத்த தயக்கம் அரசு காட்டி வருகிறது.

வருவாய் கிடைக்கிறது
தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டுகளின் போது மதுபான விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. வழக்கத்தை விட கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் அரசிற்கு வருவாய் கிடைத்தாலும் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்பதை மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications