ஊட்டி டீன் ஏஜ் பெண்ணின் ரியல் கதை.. காதலன் செய்த நம்பிக்கை துரோகம்.. ஆடிப்போக வைக்கும் பெரிய பாடம்
ஊட்டி: ஊட்டியில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவியை எப்படி சமூக வலைதளங்கள் மூலம் காதலன் ஏமாற்றினார். அவரை நம்பி சென்ற சிறுமிக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் டீன் ஏஜ் பையன்கள் மற்றும் டீன் ஏஜ் சிறுமிகளை பெற்றோர் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இதில் தவறான பழக்ககத்தால் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக டீன் ஏஜ் சிறுமிகள் தவறான நபர்களின் ஏமாற்றுதல் காரணமாக வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். தன்னுடன் பழகும் காதலனை நம்பி தவறான பாதையில் விழும் சிறுமிகள் அதில் இருந்து மீள முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.. அப்படித்தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த தம்பதி வேலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து பிழைப்பு தேடி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்கள்.. ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்த தம்பதி, அங்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களது மகள் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவிக்கு ஊட்டி மார்க்கெட்டில் டிரைவராக பணியாற்றும் தொட்டபெட்டாவை சேர்ந்த யுவராஜ் என்ற ஹரிஷ்(வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறியது.
ஆனால் 2 பேர் இடையே நாளடைவில் பிரச்சினை ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்து விட்டார்கள். இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக மாணவியின் தந்தை சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மாணவியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே தன்னுடைய தோழிகளை பார்க்க சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. மாணவியின் தாயார் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்கவில்லை என்பதால், தேனாடுகம்பை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.
போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், 13-ந் தேதி மாணவி மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறார். விசாரணையில், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக மாணவி மேட்டுப்பாளையத்திற்கு பஸ் ஏற சென்றிருக்கிறார். அப்போது ஏற்கனவே பேஸ்புக் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவர் அங்கு வந்து, தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியிடம், போலீசார் தொடர் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே காதலித்து வந்த ஹரிஷ் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர் மட்டுமல்லாமல், சிறுமியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி வெவ்வேறு காலக்கட்டங்களில் இன்னும் சிலர் சிறுமியிடம் பழகி பலாத்காரம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா, ஊட்டியை சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டியை சேர்ந்த பிரவீன்(19), பெந்தட்டியை சேர்ந்த பிரேம்குமார்(24) உள்பட 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தார்கள்.. தலைமறைவான மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications