நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை! இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை! வங்கதேச அமைச்சர் தடாலடி!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: ‛‛நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா சர்ச்சையாக பேசியது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. இது வங்காளதேசத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயம் இல்லை'' என வங்காளதேச தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத்

பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நுபுர் சர்மாவை பாஜக கட்சி சஸ்பெண்ட் செய்தது. நவீன் குமார் ஜிண்டால் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியது. மேலும், பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

இருப்பினும் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்பினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. உத்தர பிரதேசம், ஜார்க்ண்ட் மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாகின. பல இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு

வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு

முன்னதாக இந்த விவகாரத்தில் கத்தார், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு பிறகு தான் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

கண்டிக்கப்பட வேண்டும்

கண்டிக்கப்பட வேண்டும்

இந்நிலையில் நபிகள் நாயகத்துக்கு எதிராக நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக வங்காளதேசம் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்ததற்காக இந்திய அரசுக்கு "வாழ்த்துக்கள்". தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நபிகள் நாயகத்துக்கு எதிரான அறிக்கை, பேச்சுகள் கண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் வங்காளதேச அரசு, நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துக்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. தற்போதைய பிரச்சனைக்கு நான் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தேன்.

உள்நாட்டு பிரச்சனை

உள்நாட்டு பிரச்சனை

இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. வங்காளதேசத்துக்கு வெளிப்புறத்தில் நடக்கும் பிரச்சனை. இப்படித்தான் அரசு பார்க்கிறது. மேலும் இதுபோன்று சம்பவங்களில் இஸ்லாமிய அமைப்புகள் வங்காளதேசத்தில் போராட்டம் நடத்துவது தொடர்கிறது. இது வழக்கமானது தான். மேலும் அரபு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பிரச்சனை இருந்தாலும் அவ்வாறு வங்கதேசத்தில் இல்லை.நாங்கள் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளோம். கொரோனா பரவல் காலத்தில் 110 ஆம்புலன்ஸ்களை இந்தியா வழங்கியது. இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கான எடுத்துக்காட்டு. உள் அரசியல் காரணமாக தலைவர்கள் நிறைய விஷயங்களைச் சொல்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதுபோன்ற பேச்சுகள் குறித்து நாங்கள் எந்த விளக்கத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+