Operation Sindoor: பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. நள்ளிரவில் நடந்த தாக்குதல்.. ஆடிப்போன பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவை மேலும் விரிசல் அடைய செய்தது.இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் பங்கிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த சூழலில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்.

Operation sindoor

இந்த சூழலில் மே 7ஆம் தேதி அதிகாலை 1. 44 மணிக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது (தீவிரவாத முகாம்)இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து இன்று விரிவான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது. அதில், இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், என்ன பாதிப்பு ஏற்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை சமூக வலைத்தளத்தில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பதாக பலரும் நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதல் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்தியா ஏவுகணை வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், போர் விமானங்கள் மூலம் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+