கோலா கோலா கோலா.. மகன்களுக்கு ஊத்தி கொடுத்த தந்தை.. அள்ளி கொண்டு போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஒரு அப்பா தன் மகன்களுக்கு குடிக்க கூல் டிரிங்க்ஸ் அதாவது கோக் வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிடுச்சு. ஏன்?? இதை படிங்க.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த 'பாசக்கார' ஒரு குடிகாரர். எந்நேரமும் போதைதான். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டால் வீடு தலைகீழாகிவிடும். பொண்டாட்டியை கொடுமைப்படுத்தவும் ஆரம்பிச்சிடுவார்.

கோக் பாட்டில்கள்

கோக் பாட்டில்கள்

குடும்பத்தை சுத்தமாக கவனிக்கவே கவனிக்காத இந்த தந்தை, சாப்பிடவும் வீட்டுக்கு சரியாக வாங்கி போடுவதும் கிடையாது. தனக்கு வரும் பென்ஷன் பணத்தை வைத்தும் சாப்பிடுவதற்கு எந்த செலவும் செய்வது இல்லை. ஆனால் பிள்ளைகள் மேல் திடீர் திடீர் என்று அளவுக்கு அதிகமான பாசம் பீறிட்டு வந்துவிடும். அதனால் இவர் தனது குழந்தைகளுக்கு எந்நேரமும் கோகோ கோலா கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

காலி ஃப்ரிட்ஜ்

காலி ஃப்ரிட்ஜ்

பிள்ளைகளுக்கு சாப்பிடவும் வேறு எதுவும் இருப்பதில்லை. சரக்கு அடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது தினமும் கையில் கோக் பாட்டில்கள் இருக்கும். அதை கொண்டு வந்து பிள்ளைகளை குடிக்க சொல்லுவதுதான் இவரது வழக்கம். அதனால் குழந்தைகளுக்கு உடம்பு முழுசும் கெட்டு போய் உள்ளது. முகமெல்லாம் வாடி சோர்ந்துபோய், உடலில் வலு இல்லாமல் ஆகிவிட்டார்கள். இவர் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் எப்போதுமே காலியாகத்தான் இருக்குமாம்.

மர்மமான நடவடிக்கை

மர்மமான நடவடிக்கை

இப்படி, வீட்டை சரியாக கவனிக்காதது, எதுவும் வாங்கி போடாதது, சாப்பாடு தராமல் பிள்ளைகளுக்கு கோக் மட்டும் வாங்கி தந்து வளர்த்து இருப்பது, இதையெல்லாம் அக்கம் பக்கம் இருப்பவர்கள் கவனித்துவிட்டு என்னமோ மர்மமாகவே உள்ளதே என்று நினைத்து போலீசுக்கும் தகவல் அளித்து விட்டார்கள். போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பேச்சே வரவில்லை

பேச்சே வரவில்லை

அப்போது, வெறும் நுரை நுரையாக பாட்டிலில் அடைத்து வைத்து இருக்கும் கோக்-கை குடித்து குடித்து இரு மகன்களில் ஒருவருக்கு பற்கள் முழுவதுமாக சொத்தையாகி கெட்டு போய்விட்டது தெரியவந்தது. ஆனால் இதைவிட ஷாக் என்னவென்றால், இப்படி குடித்ததால் இன்னொரு சிறுவனுக்கு பேச்சு வராமலே போய்விட்டிருக்கிறது. இதையடுத்து அந்த குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனர். இப்போது இந்த குடும்ப தலைவருக்கு 3 மாசத்துக்கு ஜெயில்தான்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+