Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏலியன்".. 2 விரல்களை வெட்டி.. நாக்கை இரண்டாக பிரித்து.. இளைஞர் செய்த வினோத சர்ஜரி.. பரபர சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: தன்னை ஒரு வேற்றுகிரகவாசியாக கருதிக்கொண்ட இளைஞர் ஒருவர் தனது ஆரோக்கியமான உடலை தீவிரமான அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தி மாற்றி அமைத்துள்ளார். எந்த அளவுக்கு எனில், தனது ஆரோக்கியமான 2 விரல்களையும் அவர் துண்டித்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

மனிதர்கள் தாங்கள் மற்றவர்களை விட தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்த சிந்தனை தற்போதைய காலகட்டங்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

ஏலியன்

ஏலியன்

உடை, சிகை அலங்காரம், பச்சை குத்தி கொள்ளுதல் என பல வழிமுறைகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் அந்தோனி லோஃப்ரெடோ தன்னை தனியாக காட்டுவதற்கு தன்னை ஒரு கருப்பு வேற்றுகிரகவாசி என்றே அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். மட்டுமல்லாது தன்னை ஒரு புராஜெட் என்றும் கூறிவருகிறார். இதன் காரணமாக தன்னுடைய ஆரோக்கியமான இரண்டு விரல்களை வெட்டியுள்ளார்.

 செயற்கை வளையம்

செயற்கை வளையம்

அதேபோல இடது கை வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக அறுவைசிகிச்சை மூலம் அந்த கையில் செயற்கை வளையங்களை உருவாக்கியுள்ளார். இத்துடன் நிற்காமல் தனது நாக்கை இரு துண்டுகளாக வெட்டியுள்ளார். காது, உதடு, மூக்கு ஆகியவற்றையும் அவர் அறுத்துக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் வரும் ஒரு கற்பனை வேற்றுக்கிரக மனிதரை போல அவர் தற்போது தோற்றமளிக்கிறார். சரி ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு, தனித்தன்மை வேண்டும் என்பதே அவரது பதிலாக இருக்கிறது.

லோஃப்ரெடோ

லோஃப்ரெடோ

ஆனால் இவற்றையெல்லாம் செய்வதால் லோஃப்ரெடோ சில இன்னல்களையும் எதிர்கொண்டுள்ளார். அதாவது மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் செல்லும்போது மக்கள் இவரை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பதாகவும், தன்னை ஒரு மனநோயாளியாகவே பார்ப்பதாகவும் லோஃப்ரெடோ கூறுகிறார். சாலைகளில் இரவு நேரங்களில் நடந்து செல்லும்போது மக்கள் இவரை கண்டு அச்சமடைகின்றனர். அதன் காரணமாக இவர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதைக்கு எதிர் திசையில் சென்றுவிடுவாராம்.

 ஏலியன் தோற்றம்

ஏலியன் தோற்றம்

இதையெல்லாம் விட குழந்தைகளிடத்தில் அதீத கவனமுடன் தான் இருப்பதாக லோஃப்ரெடோ கூறுகிறார். ஏனெனில் குழந்தைகள் தன்னை பார்த்த மாத்திரத்திலேயே கடுமையாக பயந்துவிடுவதாகவும் இதனால் முடிந்தவரை குழந்தைகளின் பார்வையிலிருந்து தான் விலகி இருப்பதாகவும் லோஃப்ரெடோ கூறுகிறார். எது எப்படியோ ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த பூமியில் எப்படி வேண்டுமானாலும் வாழ்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் லோஃப்ரெடோ அவர் விருப்பம் போல வாழ்ந்து வருகிறார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஆனால் இந்த உருமாற்றத்தில் தற்போது மேலும் ஒரு டிவிஸ்டை லோஃப்ரெடோ கொடுத்திருக்கிறார். அதாவது தான் அடுத்ததாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள போவதாகவும் அதன்படி தன்னுடைய ஆணுறுப்பை இரண்டாக வெட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்போ சொல்லுங்கள் மக்களே ஏலியன்களை நேரில் சந்திக்க உங்களுக்கு விருப்பம் உண்டா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+