அடுத்த அதிர்ச்சி: 'தோனி பட' நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி
பாட்னா: பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
மூத்த ஹரியானா காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா தேவி மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவிலிருந்து சென்று கொண்டிருந்தனர். ஓ.பி.சிங்கின் மைத்துனர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்..
2020ம் ஆண்டு, ஜூன் 14ம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் சுஷாந்த் சிங் உயிரிழந்தது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தோனி பயோபிக் படம்
இவர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்து நாடு முழுக்க புகழ் பெற்ற நடிகரானவர். பல கோணங்களில் அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது. ஹல்சி காவல் நிலையத்தின் கீழ் உள்ள பிப்ராவில் நடுநிலைப் பள்ளி அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பலியான 6 பேர்
இதுபற்றி லக்கிசராய் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுஷில் குமார், கூறுகையில், "ஒரு லாரியும் டாடா சுமோவும் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். சுமோவில் சென்றவர்கள் பாட்னாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்," என்று சுஷில் குமார் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை
காயமடைந்தவர்களில் இருவர் பால்முகுந்த் சிங் மற்றும் தில் குஷ் சிங் ஆகியோர் கூடுதல் சிகிச்சைக்காக, பாட்னாவுக்கு அனுப்பப்பட்டனர், பால்மிகி சிங் மற்றும் டோனு சிங் ஆகியோர் லக்கிசராய் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் உறவுக்காரர்கள்
இறந்தவர்கள் லால்ஜித் சிங் (ஓ.பி. சிங்கின் மைத்துனர்), அவரது இரண்டு மகன்கள் அமித் சேகர் என்ற நெமனி சிங் மற்றும் ராம் சந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேபி தேவி, அனிதா தேவி மற்றும் டிரைவர் பிரீதம் குமார் என அடையாளம் காணப்பட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நேரடி குடும்பத்தினர் இல்லை என்றபோதிலும், உயிரிழந்தவர்கள், அவரது உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications