Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" ஹாபியாமே.. சாருக்கு உடம்பெல்லாம் மச்சம்.. மெடிக்கல் ஷாப் போன "பாடகர்".. சிக்கிய 6 சில்வண்டுகள்

4 மாநிலங்களில் 6 திருமணம் செய்தவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் நடந்த சம்பவத்தை கேட்டு, 90'ஸ் கிட்ஸ்களின் காதில் புகைச்சல் வந்து கொண்டிருக்கிறது.. என்னவாம்? அப்படி என்ன நடந்தது.

பீகாரில் ஜவதாரி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் சோட்டு குமார்... இவரது மனைவி பெயர் மஞ்சு.. ஆனால் சில வருடமாகவே, சோட்டுவை காணவில்லை.. எங்கோ போய்விட்டார்.

ஒருநாள் மெடிக்கல் ஷாப் போய், மருந்து வாங்கி வருகிறேன் என்று மஞ்சுவிடம் சொல்லி விட்டு போனாராம்.. அதற்கு பிறகு திரும்பி வரவேயில்லை.. இதனால் மஞ்சு குடும்பத்தினர் சோட்டுவை தேடி கொண்டிருந்தனர்.

 சோட்டு ஜோடி

சோட்டு ஜோடி

ஒருநாள் சோட்டுவை மஞ்சுவின் சகோதரர் விகாஸ், பார்த்து விட்டார்.. கொல்கத்தா செல்வதற்காக ஜமுய் ரெயில்வே ஸ்டேஷனுக்கு விகாஸ் வந்துள்ளார்... அப்போது, ரெயில்வே ஸ்டேஷனில் இன்னொரு பெண்ணுடன் சோட்டு ஒன்றாக ஜோடி சேர்ந்து போவதை பார்த்துள்ளார். இதனை உடனே, சோட்டு குறித்த தகவலை தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லி உள்ளார்.. குடும்பத்தினரும் இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்து, போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் சோட்டுவை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.

 மஞ்சு மஞ்சு

மஞ்சு மஞ்சு

இதுகுறித்து மஞ்சுவின் அம்மா கோபியா தேவி போலீசாரிடம் சொல்லும்போது, "கடந்த 2018-ல் என்னுடைய மகள் மஞ்சுவுடன் சோட்டுக்கு கல்யாணம் நடந்தது. இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ஒன்றரை வருடத்திற்கு முன்பு மருந்து வாங்கி வருகிறேன் என்று சொல்லி சென்றவர் மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.. கடைசியில் பார்த்தால், சோட்டு எங்களை ஏமாற்றி விட்டார். ராஞ்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோட்டுவுக்கு கல்யாணம் நடந்துள்ளது. அவங்களுக்கு 4 குழந்தைகள் வேறு இருக்கிறார்கள் என்றார் கண்ணீர் விட்டு சொன்னார்..

பாடகர்

பாடகர்

இதுகுறித்து விகாஸ் போலீசில் சொல்லும்போது, என் தங்கச்சி மஞ்சு, சோட்டுவுக்காக தின தினம் காத்திருந்தாள்.. ஆனால் இன்னொரு பெண்ணுடன் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன்.. அந்த பெண்ணை, தன்னுடைய மனைவி என்று சோட்டு சொல்கிறார்" என்று வருத்தத்துடன் சொன்னார்... இவர்கள் 2 பேரும் சொன்னதையடுத்து, போலீசார் சோட்டுவிடம் விசாரணை நடத்தினார்கள்.. சோட்டு சொன்னதைகேட்டு, அதற்கு மேல் போலீசார் உறைந்து போய்விட்டார்கள். 2வது கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார் என்று சோட்டு மீது கவலையுடன் சொல்கிறார்கள் மஞ்சுவின் குடும்பத்தினர்.. ஆனால், சோட்டு சாரக்கு ஏகப்பட்ட கல்யாணம் ஆகி உள்ளது.

 சூப்பர் பாட்டு

சூப்பர் பாட்டு

சோட்டு, சூப்பராக பாட்டு பாடுவாராம்.. மா சாரதா என்ற இசைக்குழுவில் பாடகராகவும் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு பாட்டு கச்சேரி எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.. அதாவது, சினாவரியா, சுந்தர்காண்ட், ராஞ்சி, சங்ராம்பூர், டெல்லி, தியோகார் பகுதியில் தலா ஒரு பெண்ணை கல்யாணம் செய்துள்ளார்... ஒவ்வொருவருடனும் சோட்டு குடும்பம் நடத்தி உள்ளார்.. ஒவ்வொரு மனைவிக்கும் குழந்தை உள்ளதாம்..

ஹாபிஸ்

ஹாபிஸ்

கதறி கதறி போலீஸ்வரை புகார் தர வந்துள்ள மஞ்சு, சோட்டுவுக்கு 2வதாக வாக்கப்பட்டவராம்.. அதேசமயம், மஞ்சுவை தவிர, வேறு யாருக்கும் சோட்டுவுக்கு இன்னொரு திருமணம் ஆன விஷயம் தெரியவில்லை.. காரணம், ஒவ்வொரு மனைவியும் ஒவ்வொரு மாநிலம் என்பதால், இதுகுறித்து தெரியவும் வாய்ப்பில்லாமலேயே போய்விட்டது.. இதுவரை யாரும் சோட்டு புகார் சொல்லாததால், வாக்கு எதுவும் போலீசார் பதியவில்லையாம்.. ஆனால், மற்ற மனைவிகள் இதுகுறித்து புகார் சொன்னால் விசாரணை நடத்துவோம் என்கிறார்கள்.. கச்சேரி செய்ய செல்லும் இடத்திலெல்லாம் சோட்டு பாட்டு பாட, அந்த பாட்டில் பெண்கள் மயங்கி கிறங்கிவிழ, உடனே அவர்களை சோட்டு திருமணம் செய்துள்ளார். ஆனால், இந்த சோட்டு, ஒரு கொள்கை வைத்துள்ளார்.. அதாவது, ஒரு பெண்ணை கல்யாணம் செய்வதற்கு முன்பு, இன்னொரு பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுவது அவரது ஹாபியாம்.. இது எப்படி இருக்கு?!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+