அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

Subscribe to Oneindia Tamil

பாட்னா : பீகார் மாநிலம் பாட்னா அருகே 28 வயதான பாடகியை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட வேண்டும் என அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் விடுதி அறைக்குள் அடைத்து வைத்து 3 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மட்டும் 5,310 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசம் 2,769 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்ததாக மொத்தம் 2,339 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதேபோல் பீகாரிலும் பெண்களுக்கு குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

28 வயதான பாடகி

28 வயதான பாடகி

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னா அருகே 28 வயதான பாடகியை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட வேண்டும் என அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் விடுதி அறைக்குள் அடைத்து வைத்து 3 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜஹானாபாத் மாவட்டத்தில் வசிப்பதோடு பீகாரில் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களில் பாடும் உள்ளூர் பாடகி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் மூன்று இளைஞர்கள் திருமண வரவேற்பு நிகழ்சியில் பாட வேண்டும் என தொலைபேசி மூலம் ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட இடத்திற்கு பாடகி சென்றபோது அவ்வாறான எந்த ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், சம்பவ இடத்தில் மூன்று ஆண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அறையில் இருந்த 3 நபர்கள், துப்பாக்கியை காட்டி ஒவ்வொருவராக மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும், இந்த சம்பவங்களை அவர்கள் மொபைலில் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக பெண் கூறியுள்ளார்.

3 பேர் கைது

3 பேர் கைது

எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து பெண் அருகிலிருந்த அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு போலீஸைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற ராம் கிருஷ்ணா நகர் காவல் நிலைய போலீசார், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றியதோடு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர், மேலும் அவர்கள் வசம் இருந்த துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களையும் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசியின் 376 டி (கும்பல் பலாத்காரம்), ஆயுதச் சட்டத்தின் 34 (குற்றச் சதி) மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+