இதென்னப்பா புதுசா இருக்கு - பிராமணர்களை இழிவுபடுத்தியதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு!
பிராமணர்களை இழிவாக பேசிவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என பீகாரில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
பாட்னா: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், பிராமணர்களை இழிவுபடுத்தியதாக பீகார் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீர்திருத்தவாதி ரவிதாசர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், கோவிலில் பூஜை செய்கிற பண்டிட்டுகள்தான் இந்து மத ஜாதிய படிநிலைகளை உருவாக்கினர் என கூறியிருந்தார்.
அதாவது, நமது மனசாட்சி, உணர்வும் ஆகியவை ஒன்றுதான். இவற்றின் மீதான கருத்துகள்தான் மாறுபாடு அடைகின்றன. ஒவ்வொரு பணியுமே சமூக நன்மைக்காக இருக்கும்போது அவை சிறியதா பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும்? மனிதர்களைப் படைத்தவருக்கு அனைவரும் சமம். ஒரே ஜாதிதான். ஆனால் பல்வேறு ஜாதிகளை பூசாரிகளாகிய பண்டிட்டுகளே உருவாக்கிவிட்டனர் என கூறியிருந்தார் மோகன் பகவத்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பூரி சங்கராச்சாரியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில், மோகன் பகவத்தின் பேச்சு பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது பிப்ரவரி 20-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இதனிடையே பிராமணர்களை இழிவுபடுத்தியதாக சொல்லப்படும் மோகன் பகவத்தின் பேச்சு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விளக்கம் தந்துள்ளது. அந்த விளக்கத்தில், மோகன் பகவத் பண்டிட்டுகள் என குறிப்பிட்டிருப்பது எந்த ஒரு பிரிவினையும் குறிப்பிடுவது என்பது அர்த்தம் அல்ல. ஜாதிய படிநிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படி சொன்னார். ஆனால் சில ஊடகங்களே பிராமணர்கள் குறித்தே மோகன் பகவத் பேசிவிட்டார் என எழுதி இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications