பீகார் தேர்தல்: ஆர்ஜேடி- 145; காங். 70; இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டி- நாளை அறிவிப்பு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங். தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆர்ஜேடி 145; காங்கிரஸ் 70 மற்றும் இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
243 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 28-ந் தேதியும் 2-வது கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 3, 3-ம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். அனைத்து கட்ட வாக்குகளும் அக்டோபர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுத் தாக்கல்
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் நேற்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரைப் பொறுத்தவரையில் ஜேடியூ-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆர்ஜேடி- காங். கூட்டணியும் சமபலத்துடன் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இம்முறை ஆர்ஜேடி-காங். அணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளன.

வேட்பு மனுத் தாக்கல்
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் நேற்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரைப் பொறுத்தவரையில் ஜேடியூ-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆர்ஜேடி- காங். கூட்டணியும் சமபலத்துடன் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இம்முறை ஆர்ஜேடி-காங். அணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளன.

முதல்வர் வேட்பாளர் நிதிஷ்
ஜேடியூ-பாஜக கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆர்ஜேடி-காங். இந்த பஞ்சாயத்துக்குள் சிக்கவில்லை. இந்த அணிகள் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உபேந்திர குஷ்வாஹாவே முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்கிறது.

அடங்கியது பாஸ்வான் கட்சி
ஜேடியூ-பாஜக அணியில் ராம்விலாஸ் பாஸ்வானில் லோக் ஜனசக்திதான் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாகவும் லோக்ஜனசக்தி விமர்சித்தது. தற்போது லோக்ஜனசக்தி சமாதானமாகிவிட்டதாகவே தெரிகிறது. இதனால்தான் ஜேடியூ-லோக்ஜனசக்தி-பாஜக இணைந்து பிரச்சனையே இல்லாமல் தேர்தலை சந்திப்போம் என பாஜக தெரிவித்து வருகிறது.

தொகுதி பங்கீடு நாளை வெளியீடு?
இதனிடையே தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் இன்னமும் தொகுதிப் பங்கீடுகளை இரு கூட்டணிகளும் அறிவிக்காமல் இருக்கின்றன. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி நாளை தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி 145 தொகுதிகளிலும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications