கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை பாஜக அழித்துவிடும் என்பதுதானே வரலாறு.. தேஜஸ்வி யாதவ் பொளேர் அட்டாக்
பாட்னா: தங்களது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் பிற கட்சிகளை அழித்துவிடுவதுதான் பாஜகவின் பாணி என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, இப்போது ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் இணைந்துள்ளது. பாஜக-ஜேடியூ ஆட்சி முடிவுக்கு வந்து முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டார்.
ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் ஜேடியூ இணைந்து புதிய கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் அமைய உள்ளது. பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்த நிதிஷ்குமார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், 7 கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன; ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைவரது கையெழுத்துடன் கூடிய கடிதங்களும் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஆளுநர் அழைக்கும் நிலையில் நிதிஷ்குமார் நாளை முதல்வராக பதவியேற்பார்.
நிதிஷ்குமார் தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சியில், தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சர் இலாகா வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி ப்ளஸ் 3 அல்லது 4 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்படும்.
பாஜகவுடனான கூட்டணியை நிதிஷுமார் முறித்துக் கொண்டதை அக்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பீகார் அரசியல் நிலவரம், நிதிஷ்குமார் முதல்வராவது தொடர்பாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நாட்டிலேயே மிக அனுபவம் வாய்ந்த முதல்வர் நிதிஷ்குமார். இந்தி பேசும் நிலப்பரப்பு முழுவதிலும் பாஜகவுக்கு கூட்டணி கட்சியே கிடையாது. பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சி காணாமல் போய்விடும் என்பதுதான் வரலாறு. இதனைத்தான் பஞ்சாப்பிலும் மகாராஷ்டிராவிலும் நாம் பார்த்தோம்.
மாநில கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம் என்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. பாஜகவுக்கு கட்சிகளை எம்.எல்.ஏக்களை மிரட்டவும் விலை பேசி வாங்கவும்தான் தெரியும். பாஜகவின் அத்தகைய ஒரு அஜெண்டாவை பீகாரில் செயல்படுத்த விடமாட்டோம். பாஜகவின் அத்தகைய முயற்சியை எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications