பீகார் சட்டசபை தேர்தல்... பெண்கள் இளைஞர்களை குறிவைத்த நிதிஷ்.. அள்ளித் தெளித்த சலுகைகள்!!
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முக்கியத்துவம் அளித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு என்று அதிக நிதியுதவிகளை அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி துவங்கி சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ட்வீட் செய்து இருந்த முதல்வர் நிதிஷ் குமார், ''மக்களுக்கு சேவை செய்வது நம்முடைய கடமை. பீகார் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் புதிய தொழில் துவங்கினால் ரூ. 5 லட்சம் கடனுதவி அளிக்கப்படும் என்றும், இதில் ரூ. 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு வட்டியில்லாமல் ரூ. 5 லட்சம் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு முடித்து இருக்கும் பெண்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை நிதியுதவி அளிக்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாநிலத்தில் சுய தொழில் துவங்க, இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 50 சதவீத மானியத்துடன், 3 லட்ச ரூபாய் நிதியுதவி இளைஞர்களுக்கு அளிக்கப்படும். உள்ளாட்சி நிர்வாகம், போலீஸ் உட்பட பல துறைகளில், பெண்கள் அதிகளவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும், நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தி தருதல், அனைத்து கிராமங்களிலும், சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துதல், கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும், கழிப்பறை கட்டிக் கொடுத்தல் உள்பட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் ஐக்கிய ஜனதா தளம் குறிப்பிட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications