நோயாளியின் கண்ணை தின்ற எலி? அதிர்ந்து போன உறவினர்கள்.. பீகார் அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது!
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதற்கிடையே அவர் உயிரிழந்த சில மணி நேரத்தில் அவரது கண் மாயமாகியுள்ளது. பதறிப் போன உறவினர்கள் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அளித்த பதில் அலட்சியத்தின் உச்சமாக இருக்கிறது.
நமது நாட்டில் அரசு மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பெரும் அவதிப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.

இதற்கிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் ஒரு ஷாக் சம்பவம் தான் பீகாரில் நடந்துள்ளது. உயிரிழந்த நோயாளியின் கண் மாயமான நிலையில், அதற்கு மருத்துவர்கள் அலட்சியமான பதிலையே அளித்துள்ளனர்.
பீகார் மருத்துவமனை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபன்டஸ் குமார்.. கடந்த வியாழக்கிழமை வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்த நபர் சிகிச்சை பலனில்லாமல் வெள்ளிக்கிழமை இரவு 8.55க்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி வரை மருத்துவமனையில் அவரது உடலுக்கு அருகிலேயே குடும்பத்தினர் இருந்துள்ளனர். அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற அவரது குடும்பத்தினர், சில மணி நேரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பிய போது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஃபேன்டஸ் குமாரின் இடது கண் மாயமாகி இருந்தது.
"பணக்கார பெண்களுடன் உடலுறவு கொண்டு.. கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் தரோம்" அலறவிடும் புதுவித மோசடி
உறவினர்கள் புகார்: மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரே சட்டத்திற்குப் புறம்புமாகக் கண்ணை அகற்றியதாக ஃபேன்டஸ் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், "அவர்கள் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும்? உயிரிழந்த நபரின் கண்ணை மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்களே அகற்றியுள்ளனர். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் இதுபோல நடந்திருப்பதை ஏற்கவே முடியவில்லை.. இதில் ஏதோ சதி நடந்து இருக்கிறது.
ஐசியு பிரிவில் தான் அவரது உடல் இருந்தது. அங்கிருந்து எப்படி கண் அகற்றப்பட்டது எனப் புரியவில்லை. இப்படி நடந்தால் நாங்கள் யாரை நம்புவது.. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
எலிகள் காரணமா: இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "கண்ணை யாரோ எடுத்துள்ளதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள். சடலத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டால் கண்ணை எலிகள் கடித்திருக்கலாம் என்கிறார்கள். இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் வினோத் குமார் சிங் கூறுகையில், "எலிகள் இதைச் செய்து இருக்கலாம். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மருத்துவர்கள் தகவல்: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஃபண்டஸ் குமார் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோட்டா அகற்றப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8:55 மணிக்கு அவர் உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணி வரை அவரது சடலம் இருந்த இடத்தில் தான் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு திடீரென கண்ணை காணவில்லை என்றார்கள். இது தொடர்பாக விசாரிக்கிறோம். போலீசில் புகாரும் அளித்துள்ளோம்.
கண்களை எலிகள் கடித்து இருக்கலாம். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் தெளிவாகத் தெரியும். அதேநேரம் இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது. கவனக்குறைவாக இருந்தாலும் சரி, யாராவது தவறு செய்திருந்தாலும் சரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண் திருட்டு இல்லை: வேறு ஒருவருக்குக் கண்ணை வைக்கவே ஃபண்டஸ் கண்ணை எடுத்துள்ளதாக குடும்பத்தினர் சொல்கிறார்கள். ஆனால், அப்படி நடந்திருக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் நோயாளி இரவு 8.55 மணிக்கு இறந்தார். 1 மணிக்கு பிறகே கண் மாயமாகியுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நோயாளியின் உடலில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் கண்ணை அகற்றியிருக்க வேண்டும். எனவே, இதற்கான வாய்ப்பு குறைவு" என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications