பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் மஹா கூட்டணி தொகுதி பங்கீடு.. லாலு மகன் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மஹா கூட்டணியில் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. , ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார.. கூட்டணியின் தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஜக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்த வருகிறது. சட்டசபை தேர்தல் அக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bihars Grand Alliance Clinches Seat-sharing Deal for Assembly Polls, Tejashwi Yadav Oppn’s CM Face

எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆர்.ஜே.டி கட்சி பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் , 144 இடங்களில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறையே நான்கு மற்றும் ஆறு இடங்களில் போட்டியிடுகின்றன. சிபிஐ-எம்எல் 19 இடங்களில் போட்டியிடும். பாலிவுட் செட் டிசைனர் முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகியவற்றுக்கும் கணிசமாக சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தொண்டர்கள் vs காவல்துறை.. போர்க் களமான டெல்லி பார்டர்.. தடியடி, தள்ளுமுள்ளுகாங்கிரஸ் தொண்டர்கள் vs காவல்துறை.. போர்க் களமான டெல்லி பார்டர்.. தடியடி, தள்ளுமுள்ளு

இருப்பினும், பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னி "உரிய இடம்" கிடைக்காததால் மஹா கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆர்.ஜே.டி தலைவரான லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ் ராஞ்சியில் சிறையில் சென்று சந்தித்த பின் பாட்னாவுக்கு அண்மையில் திரும்பினார். அதன் பின்னரே தேர்தல் கூட்டணி, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்றை விறுவிறுப்பாக நடந்தது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்.டி.ஏ) பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பகிர்வு ஒப்பந்தத்தை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
bihar's opposition Grand Alliance announced on Saturday that it has reached a seat-sharing deal for the upcoming assembly elections in the state. The RJD, which is spearheading the opposition coalition, will contest on 144 seats in the 243-strong assembly. The Congress has been offered 70 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X