• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயிலில் அல்ல.. ரயிலையே திருடி சென்ற கும்பல்.. பீகாரை அலறவிடும் "ட்ரெயின் பாய்ஸ்".. யார் இவங்க?

Google Oneindia Tamil News

பாட்னா: "ரயிலில் சென்று திருடுவதெல்லாம் பழைய டெக்னிக் பாஸ்.. நாங்க ரயிலையே தூக்கிருவோம்ல.." என்ற ரேஞ்சுக்கு அல்ட்ரா மாடர்ன் திருடர்கள் பீகாரையே கதிகலங்கச் செய்து வருகின்றனர்.

எந்த வீட்டில் இன்று திருட்டு நடக்கப் போகிறதோ என எண்ணி கவலையில் இருந்த பீகார் போலீஸார், தற்போது எந்த ரயிலை தூக்க போகிறார்களோ என தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள், தண்டவாளங்கள், ரயில்வே மேம்பாலங்கள் என ரயில் சம்பந்தப்பட்ட எதையும் விடுவதில்லை என கங்கனம் கட்டி களம் இறங்கியுள்ளனர் இந்த திருடர்கள். இவர்களுக்கு பீகார் போலீஸார் சூட்டியிருக்கும் பட்டப்பெயர்தான் "ட்ரெயின் பாய்ஸ்".

காணாமல் போன தண்டவாளங்கள்

காணாமல் போன தண்டவாளங்கள்

பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் காணாமல் போயின. இதுகுறித்து போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவது யார் எனத் தெரியவில்லை. இதுபோன்ற திருட்டுகள் வழக்கமான ஒன்று என்பதால் போலீஸாரும் இந்த விஷயத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால், கடந்த மாதம்தான் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி, போலீஸாரை தூக்கத்தை தொலைத்து ஓடச் செய்துள்ளது.

இன்ஜினையே தூக்கிய கும்பல்..

இன்ஜினையே தூக்கிய கும்பல்..

கடந்த மாதம் பீகாரின் பரோஹ்னி என்ற பகுதியில் ஒரு டீசல் ரயில் இன்ஜின் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த நாள் காலையில் ரயில் ஓட்டுநர் வந்து பார்த்த போது அந்த இன்ஜினை அங்கு காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஓட்டுநர், இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து ஆய்வு செய்ததில், ரயில் இன்ஜினையே பார்ட் பார்ட் ஆக கழட்டி ஒரு கும்பல் தூக்கிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், 3 பேரை கைது செய்தனர். ஆனால், அவர்கள் வெறும் கூலிக்காரரர்கள் என்பது போலீஸாருக்கு பின்னர்தான் தெரியவந்தது.

அடுத்தடுத்து அரங்கேறிய திருட்டு...

அடுத்தடுத்து அரங்கேறிய திருட்டு...

இந்த திருட்டு கும்பலை ஒருபுறம் போலீஸார் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் பீகாரின் பூர்னியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீராவி ரயில் இன்ஜின் ஒன்று காணாமல் போனது. இந்த அதிர்ச்சியில் இருந்து போலீஸார் மீள்வதற்குள்ளாக, இரண்டு தினங்களுக்கு முன்பு ராணிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பெரிய ரயில்வே மேம்பாலம் மிகவும் பலவீனமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது, அந்த பாலத்தில் உள்ள இரும்பு நட்டுகள், போல்ட்டுகள் போன்ற இரும்புப் பொருட்கள் அந்த கும்பல் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, ரயில் சம்பந்தப்பட்ட பொருட்களை குறிவைத்து ஒரு பெரிய கும்பல், நெட்வோர்க் போல செயல்பட்டு திருடுவதாக பீகார் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தூக்கத்தை தொலைத்த போலீஸார்..

தூக்கத்தை தொலைத்த போலீஸார்..

மேலும், இந்த திருட்டுகள் யாவும் அருகருகே உள்ள பகுதிகளில் நடப்பதில்லை. பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் அடுத்தடுத்து இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை வைத்து பார்க்கும் போது, இந்த கும்பல் பீகார் முழுவதும் பரவி கிடப்பது உறுதியாகியுள்ளது. எனவே, பீகாரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிதாக முளைத்துள்ள இந்த ரயில்வே கொள்ளையர்களை கண்டுபிடிக்க 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை போலீஸார் அமைத்து இரவு பகலாக தேடி வருகின்றனர்.

English summary
The Bihar Police is seaching for gangs of thieves who stealing diesel and vintage rail engines and unbolting steel bridges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X