போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயில் கேட்டு வந்த பெண்.. சட்டையை கழற்றிய அதிகாரி.. ஆபீஸ் ரூமில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் தனது மகனுக்கு ஜாமீன் கோரி வந்த பெண்ணிடம் கட்டாயப்படுத்திய போலீஸ் அதிகாரி காவல் நிலையத்திலேயே மோசமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சஹர்சாவை சேர்ந்தவர் சஷிபூஷன் சின்ஹா. இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரிடம் பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்திருந்தார்.

அபபோது தனது மகனுக்கு ஜாமீன் வேண்டும் என கோரி வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் யாரும் இல்லை. அந்த பெண்ணை அதிகாரியான சஷிபூஷனை சந்தித்து விவரத்தை சொல்கிறார்.

ஜாமீன்

ஜாமீன்

அதற்கு அவர் அதெல்லாம் ஜாமீனெல்லாம் கொடுக்க முடியாது, கிளம்பு கிளம்பு என்கிறார். இதனால் அந்த பெண் மிகவும் கெஞ்சுகிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் சஷிபூஷன். உடனே நான் என்ன சொன்னாலும் செய்வியா என அந்த பெண்ணிடம் சஷி கேட்கிறார்.

மகனுக்கு ஜாமீன் வேண்டும்

மகனுக்கு ஜாமீன் வேண்டும்

அதற்கு அந்த பெண், தனது மகனுக்கு ஜாமீன் வேண்டும் என்பதால் அந்த பெண்ணும் சரி என்கிறார். ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கி வர சொல்வார், இல்லாவிட்டால் அறையை சுத்தப்படுத்த சொல்வார் என எதிர்பார்த்த அந்த பெண்ணை ஒரு அறைக்கு கூட்டி செல்கிறார் சஷி. அந்த அறைக்கு பயந்து பயந்து அந்த பெண் செல்கிறார்.

சட்டையை கழற்றிய அதிகாரி

சட்டையை கழற்றிய அதிகாரி

அப்போது சஷிபூஷன் சட்டையை கழற்றுகிறார். இதனால் அந்த பெண்ணுக்கு மேலும் பயம் அதிகரிக்கிறது. உடனே ஒரு டேபிளில் உட்காருகிறார். அந்த பெண்ணை அழைத்து தனக்கு மசாஜ் செய்யும் படி கூறுகிறார். அதிலும் தன்னை மகிழ வைப்பது போல் மசாஜ் செய்தால் உன் மகனை உடனே விட்டுவிடுகிறேன் என்கிறார்.

மசாஜ்

மசாஜ்

அந்த அப்பாவி பெண்ணும் வேறு வழித் தெரியாமல் அவருக்கு காவல் நிலையத்தில் வைத்தே மசாஜ் செய்கிறார். உடனே சஷிபூஷன் ஒரு வழக்கறிஞருக்கு போன் செய்கிறார். சஷி வழக்கறிஞரிடம் "இந்த பெண் மிகவும் ஏழை. பணத்தை நான் தருகிறேன். அவர்களிடம் வாங்க வேண்டாம்.

ரூ 10 ஆயிரம்

ரூ 10 ஆயிரம்

உங்களுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டும் என கூறுங்கள். ஆதார் கார்டுகளுடன் இரு பெண்கள் வருவர். நான் உங்களுக்கு ஏற்கெனவே 10 ஆயிரம் அனுப்பிவிட்டேன். எனவே அந்த பையனை எப்படியாவது ஜாமீனில் எடுத்து விடுங்கள் என சஷி கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 3 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ அப்படியே உயரதிகாரிகளின் கண்களிலும் பட்டது. ஜாமீன் கேட்டு வந்த ஏழைகளை இப்படித்தான் டீல் செய்வதா என அதிகாரியிடம் கடிந்து கொண்ட உயரதிகாரி சஷிபூஷனை வேறு ஒரு பிரிவிற்கு இடமாற்றி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+