"மனைவியுடன் காதலன்".. ஊருக்கு நடுவில் 2வது கல்யாணம் செய்து வைத்த கணவன்.. தலையை சுற்ற வைத்த பீகார்
மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவன்
பாட்னா: தன் மனைவியை இன்னொருத்தருக்கு கணவனே கல்யாணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன... சில நேரம் விநோதங்களும் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் இது!
பீகார் மாநிலத்தின் தட்ஜேசி என்ற கிராமம் உள்ளது... இங்கு வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கும் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை வேறு ஊரில் வேலைக்கு போய்விட்டார்.
இதனிடையே மனைவியோ, கரம் பஸ்வன் என்ற இளைஞரிடம் பழகி வந்துள்ளார்.. கல்யாணத்துக்கு முனபே இவரைதான் காதலித்து வந்திருக்கிறார்.. திருமணம் முடிந்தும் உறவு தொடர்ந்துள்ளது.. ஒருநாள் மாப்பிள்ளையின் உறவினர்கள் ஊரில் இருந்து வந்துவிட்டனர்.. அப்போதுதான், அந்த பெண் தன் காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
விஷயம் பஞ்சாயத்துக்கு போனது.. அப்போது அந்த காதலன் சொல்லும்போது, "நானும் அவளும் ரொம்ப வருஷமா காதலிச்சோம்.. ஆனால், அவளை வேற ஒருத்தருக்கு கலயாணம் செய்து வைத்து விட்டனர் என்றார். இதையடுத்து கேட்ட பஞ்சாயத்து தலைவர்கள், பெண்ணின் கணவருக்கு போன் செய்து இது குறித்து தகவல் தந்தனர்.
பின்னர் அவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு பெண்ணை அங்கிருந்த ஒரு கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டு, அங்கிருந்து மனைவியை தன் வீட்டுக்கு பைக்கில் அழைத்து சென்றார். ஆனால் இது எதுவுமே போலீசுக்கு தெரியாதாம்.. யாரும் இதைபற்றி எந்த புகாரும் தரவில்லையாம்.. ஊர்க்காரர்களே பேசி எல்லாவற்றையும் முடித்துவிட்டனர் என்கிறார்கள்.. இருந்தாலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications