பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதிஷ்-லாலு சேர்ந்தா மாஸுதான்.. பாஜக வாக்கு வங்கி குளோசுதான்.. பீகார் தேர்தல் டேட்டாவை பாருங்க!

Google Oneindia Tamil News

பாட்னா: 2024 லோக்சபா தேர்தலில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகியவை ஒரே கூட்டணியில் இடம் பெறுவது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இது எப்படி என்பதை பார்ப்போம்.

Recommended Video

    Bihar-ல் கலைகிறது பாஜக கூட்டணி ஆட்சி

    பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆரம்பத்திலிருந்தே பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருந்து வந்தது. அதாவது மத்திய அமைச்சரவையில் இரு இடங்களை ஜேடியூவுக்கு ஒதுக்கவில்லை என்பதால் இந்த அதிருப்தி என சொல்லப்பட்டது.

     பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு? பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு?

     நாடாளுமன்றத் தேர்தல்

    நாடாளுமன்றத் தேர்தல்

    இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்க போகிறது. இவ்வாறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் போது பாஜகவுக்கு சரிவையே ஏற்படுத்தும் என்பது கண்கூடாக பல தேர்தல்களில் நடந்த ஒரு விஷயம்தான்.

    பீகார்

    பீகார்

    பீகார் மாநிலத்தை பொருத்தவரை அங்கு ஜேடியூ, காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுக்கென வாக்கு வங்கிகள் இருக்கும். இவை அனைத்தும் ஒன்றும் சேரும் போது தனித்து போட்டியிட்டு பாஜகவை பின்னுக்கு தள்ளிவிடலாம். இது எப்படி சாத்தியம் என்பதை பார்ப்போம்.

     2014 லோக்சபா தேர்தல்

    2014 லோக்சபா தேர்தல்

    கடந்த 2014 ஆம் லோக்சபா தேர்தலில் ஆர்ஜேடி, ஜேடியு, பாஜக+ லோக்ஜன சக்தி ஆகியவை தனித்தே போட்டியிட்டன. அப்போது பாஜக 30 இடங்களில் 22 இடங்களில் வென்றது. அது போல் லோக் ஜன சக்தி 7 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. காஙகிரஸ் கட்சி 12 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஆர்ஜேடி 27 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றது. அது போல் ஜேடியு 38 இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மட்டுமே வென்றது.

     தனித்தனியே போட்டி

    தனித்தனியே போட்டி

    ஆர்ஜேடியும் ஜேடியூவும் தனித்தனியே போட்டியிட்டதில் பெரிதாக வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலை எடுத்துக் கொண்டால் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் இருவர் தலைமையிலான கட்சிகள் இணைந்து தேர்தல் சந்தித்தன. அப்போது பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி நல்லதொரு வெற்றியை பெறவில்லை.

     லாலு- நிதிஷ்

    லாலு- நிதிஷ்

    லாலு- நிதிஷ் கட்சிக்கு மக்கள் வாக்குகளை அள்ளி குவித்தார்கள். அந்த தேர்தலின் போது பிரதமர் மோடி நிறைய பேரணிகளை நடத்தியிருந்த நிலையிலும் அதாவது ஜேடியூ ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்ற மகா கூட்டணி மொத்தம் 243 சட்டசபை தொகுதிகளில் 178 இடங்களில் வென்றது. இதில் ஆர்ஜேடி மட்டும் 80 இடங்களிலும் ஜேடியூ மட்டும் 71 இடங்களிலும் காங்கிரஸ் மட்டும் 27 இடங்களிலும் வென்றது.

    English summary
    How will BJP gets backlash in 2024 loksabha elections in Bihar? Here are the statistical data.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X