பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டரை தேடி கிளினிக்கிற்கு வந்த குரங்கு... காரணம் கேட்டா ஷாக் ஆவிங்க.. பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் குரங்கு ஒன்று திடீரென அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் அபகரித்துக் கொள்வதால் வரும் பாதிப்பு தான் இது.

நம்ம ஊரில் கூட ரயிலில் மோதி யானை போன்ற விலங்குகள் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் கூட நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.+

30 நாடுகளில் 700 பேர் பாதிப்பு! தீயாய் பரவும் குரங்கு அம்மை! இப்படி கூட பரவும்! நிபுணர்கள் வார்னிங்!30 நாடுகளில் 700 பேர் பாதிப்பு! தீயாய் பரவும் குரங்கு அம்மை! இப்படி கூட பரவும்! நிபுணர்கள் வார்னிங்!

குரங்கு

குரங்கு

அதேநேரம் சில விலங்குகள் மனிதர்கள் உடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகாரில் நடந்துள்ளது. அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், ஒரு குரங்கு தனது காயங்களுக்குச் சிகிச்சை பெறப் பீகாரில் உள்ள கிளினிக்கிற்குச் சென்றுள்ளது. குரங்கு தனது குட்டி உடன் கிளினிக்கில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிளினிக்

கிளினிக்

டாக்டருக்காக பொறுமையாகக் காத்திருந்த குரங்கைக் காண அங்கு மக்கள் திரண்டனர். நண்பகல் வேளையில் சசாரமின் ஷாஜாமா பகுதியில் உள்ள டாக்டர் எஸ்.எம்.அகமதுவின் மெடிகோ கிளினிக்கிற்குள் நுழைந்து அந்த குரங்கு, நோயாளியின் படுக்கையில் அமர்ந்தது. குரங்கின் முகத்தில் வடு இருந்தது. தனது காயத்திற்கு ட்ரீட்மென்ட் பெறக் குரங்கு ஒன்றே மருத்துவமனைக்கு வந்ததுள்ளது.

 மருத்துவர்

மருத்துவர்

இது குறித்த தகவல்கள் அக்கம் பக்கத்தில் வேகமாகப் பரவியது. இந்தச் செய்தி ஊரில் பரவியதையடுத்து மக்கள் மருத்துவமனை திரளத் தொடங்கினர். இது குறித்து டாக்டர் அகமது கூறுகையில், "குரங்கைப் பார்த்ததும் முதலில் சற்று பயந்தேன். ஆனால் குரங்கின் முகத்தைப் பார்த்தபோது, ​​​​அது காயம் அடைந்துள்ளது என்று புரிந்தது. இதனால் குரங்கிற்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்" என்றார்.

 அமைதியாக இருந்த குரங்கு

அமைதியாக இருந்த குரங்கு

அதன் பின்னர் குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை கொடுத்தோம். குரங்கிற்குத் தடுப்பூசி போட்டோம். பின்னர் குரங்கின் முகத்தில் ஆயின்ட்மென்ட் போட்டோம். நாங்கள் குரங்கிற்குச் சிகிச்சை அளித்து முடிக்கும் வரை குரங்கு செயல்முறையிலும் பொறுமையாகப் படுத்துக் கொண்டே இருந்தது. காயங்களுக்குச் சிகிச்சை அளித்த பிறகு, குரங்கு அமைதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டது.

English summary
Monkey Visits Clinic In Bihar To Get Her Wounds Treated A monkey was seen visiting a clinic in Bihar's Sasaram to get her wounds treated:(மருத்துவனிற்குச் சிகிச்சை பெறச் சென்ற குரங்கு)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X