“இதை” செய்யாவிட்டால் 2024ல் பாஜகவை வீழ்த்த முடியாது.. பிரசாந்த் கிஷோர் சொன்ன முக்கிய விஷயம்!
"ஊடகங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைவதை பார்க்கிறீர்கள். யார் யாரோடு மதிய உணவு சாப்பிடுகிறார்கள். தேனீர் குடிக்க யாரை அழைக்கிறார்கள் என்பதை கொள்கையின் உருவாக்கமாக பார்க்கிறேன்."
பாட்னா: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் மட்டுமே பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை, பாஜகவின் பலம் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், "எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒரு முகப்புத்தகத்தை போன்றது. வெறும் கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றிணைப்பதால் மட்டும் அது சாத்தியப்படாது.
நீங்கள் பாஜகவிற்கு சவால் விட வேண்டும் என்றால் அதன் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவம், தேசியவாதம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவை பாஜகவின் 3 தூண்கள்.

2 நிலைகளை தாண்ட வேண்டும்
இந்த மூன்றில் 2 நிலைகளையாவது நீங்கள் கடக்க வேண்டும். அவ்வாறு செய்யமுடியாவிட்டால் உங்களால் பாஜகவுக்கு சவால்விட முடியாது. இந்துத்துவத்தை எதிர்த்து போராடுவதற்கு கொள்கைவாதிகளின் கூட்டணி வேண்டும். காந்திவாதிகள், அம்பேதகரியவாதிகள், பொதுவுடைமையாளர்கள், கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர வேண்டும்.

கொள்கை முக்கியம்
கொள்கை என்பது மிகவும் முக்கியம். அதே நேரம் கொள்கை என்ற பெயரால் கண்மூடித்தனமாக செயல்படக்கூடாது. ஊடகங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைவதை பார்க்கிறீர்கள். யார் யாரோடு மதிய உணவு சாப்பிடுகிறார்கள். தேனீர் குடிக்க யாரை அழைக்கிறார்கள் என்பதை கொள்கையின் உருவாக்கமாக பார்க்கிறேன்.

பாஜகவை வீழ்த்த ஒரே வழி
கொள்கை ரீதியான கூட்டணி அமையாத வரை, பாஜகவை வீழ்த்துவதற்கு வேறு வழியே கிடையாது. நாம் மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றுபவன். பீகாரில் நான் மேற்கொள்ளும் ஜன் சுராஜ் யாத்ரா, காந்தியின் காங்கிரஸில் சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மாநிலத்தில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவேன்.

பீகாரில் யாத்திரை
இந்த யாத்திரை பீகாரின் இலக்குகளையும் அதன் மீதான மதிப்பீடுகளையும் மாற்றும். சாதி ரீதியிலான அரசியல் உட்பட பல்வேறு தவறான காரணங்களால் அறியப்படுகிறது பீகார். பீகார் எதற்கான மாநிலங்கள், அம்மாநிலத்தின் மக்களின் ஆற்றல் என்ன என்பதை காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

காந்தி குடும்ப ஏற்கவில்லை
காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்ய நான் விரும்பினேன். தேர்தலில் வெற்றிபெறுவதே காந்தி குடும்பத்தின் குறிக்கோள். எனது யோசனைகளை அவர்கள் விரும்பும் வழியில் செயல்படுத்த நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை எடுத்துக்கொண்டால், நாடு தழுவிய அவர் மேற்கொள்ளும் பயணமே உண்மையான சோதனையாக இருக்கும்.

யாத்திரை என்றால் என்ன?
யாத்திரை என்பது நடப்பது மட்டும் கிடையாது. அந்த 6 மாத கால ஒற்றுமை யாத்திரையில் ஏராளமான நற்பெயர்களும், ஏராளமான விமர்சனங்களும் வந்தன. 6 மாத யாத்திரைக்கு பிறகு ஏதாவது மாற்றத்தை கண்டீர்களா? அந்த யாத்திரை தேர்தலில் கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்காகவே நடைபெற்றது. யாத்திரை என்பது ஒரு பகுதியை புரிந்துகொள்வதாக இருக்காது.

ஆக்கிரோஷமானவன்
நான் கடந்த ஆண்டுகளில் கசப்பானவனாகவும், ஆக்கிரோஷம் உடையவனாகவும் வளர்ந்தேன் என்பதை ஏற்க முடியாது. ஆனால், முன்பைவிட இப்போது அதிக ஆக்கிரோஷம் என்னிடம் இருக்கிறது. சொல்லப்போனால் நான் மெலிந்துவிட்டேன் என்று மக்கள் சொல்கிறார்கள்." என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications