நோயாளி போல பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குள் வந்த கலெக்டர்! கையும் ஓடல, காலும் ஓடல! சர்ப்ரைஸ் விசிட்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், எத்தனையோ வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.. இவைகளை தொடர்ந்து கண்காணித்து, பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பு அரசு ஊழியர்களுக்கு பிரதானமாக இருக்கிறது.. ஆனாலும், ஒருசில ஊழியர்களும், அதிகாரிகளும் தங்கள் கடமைகளை சரிவர செய்வதில் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. எனவேதான், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நேரடியான திடீர் திடீர் ஆய்வுகளில் ஈடுபட நேரிடுகிறது. அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வு ஒன்று இணையத்தில் 4 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.

சமீபத்தில், வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான AP நந்தகுமார், மேற்கு ஒன்றியம் மேல் அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்..

Perambalur Collector government hospital

தூக்குவாளி முட்டைகள்

இதற்காக அப்பள்ளியின் சமையலறைக்குள் நுழைந்த நந்தகுமார், மாணவர்களுக்கு தூக்குவாளியில் வேக வைத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை எண்ணிப்பார்த்தார்..

பிறகு சமைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை திறந்து காட்ட சொல்லி, இதையெல்லாம் சுத்தமா வெச்சுக்க மாட்டீங்களா? அடுப்புல ஏன் விறகு எரியுது? கேஸ் ஸ்டவ்வில்தானே சமைக்கறீங்க? ஏன் கிச்சன் முழுவதும் கரி படிந்திருக்கு? கேஸ் இல்லைன்னு சொன்னால் என்ன அர்த்தம்? உங்கள சஸ்பெண்ட் செய்ய சொல்லட்டுமா இப்படி கரி படிந்த அறையில் சமைப்பதை குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள்? சமையலை சுத்தமாக செய்யணும்" என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

பள்ளியின் கிச்சன் சுத்தமாக இல்லை என்று பணியாளர்களை எம்எல்ஏ நந்தகுமார் கண்டித்த வீடியோ வேலூர் மாவட்டத்தில் வைரலானது நினைவிருக்கலாம்.

Perambalur Collector government hospital

பெரம்பலூர் அரசு மருத்துவமனை

அதுபோலவே, பெரம்பலூர் மாவட்டத்திலும் ஒரு வீடியோ இணையத்தில் 4 நாட்களாக வைரலாகி கொண்டிருக்கிறது.. இங்குள்ள கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படவில்லை என்ற புகார்கள் மாவட்ட கலெக்டர் மிருணாளினியின் கவனத்துக்கு எட்டியது.. அத்துடன், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பிறகு முறையான பராமரிப்பு கிடைக்கவில்லை என்ற புகாரும் கலெக்டருக்கு தொடர்ந்து சென்றுள்ளது..

கலெக்டர் சர்ப்ரைஸ் விசிட்

அதேபோல, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர், அந்த மருத்துவமனையில் முறையான பராமரிப்பில்லாததால், தான் அவதியுறுவதாக பெரம்பலுார் கலெக்டர் மிருணாளினிக்கு கடந்த 12ம்தேதி வாட்ஸாப்பில் புகார் தந்திருந்தார்.

இதனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார் கலெக்டர் மிருணாளினி.. இதற்காக அன்றிரவு சாதாரண உடையில், தன்னுடைய சொந்த வாகனத்தில் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கலெக்டர் சென்றார்.. அங்கிருந்த நர்ஸிடம், தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.. ஆனால், அந்த எந்தவிதமான பரிசோதனையும் செய்யாமல், ஊசி போட வந்துள்ளார்..

Perambalur Collector government hospital

நோயாளி போல வந்த கலெக்டர்

உடனே கலெக்டர் நர்ஸிடம், 'டாக்டர் இல்லையா? எங்கே? என்று கண்டிப்புடன் கேட்டுள்ளார்.. அப்போதுதான், வந்திருப்பது கலெக்டர் என்பது தெரிந்து அந்த நர்ஸ் ஆடிப்போனார்.. அடுத்த நிமிடமே மருத்துவமனை பரபரத்தது.. பணியிலிருந்த நர்ஸ்கள் திகைத்து போய் நின்றனர்..

மருத்துவமனையிலிருந்த மருத்துவ பதிவேடுகளை ஆய்வு செய்த மிருணாளினி, ஏன் எந்த ரிக்கார்டுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை? டியூட்டி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

கலெக்டரின் இந்த திடீர் ஆய்வால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கலெக்டர் மேற்கொண்ட ஆய்வு இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+