பெரம்பலூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் LIVE: திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி.. பாஜக டெபாசிட் இழந்தது
பெரம்பலூர்: பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் திமுக மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான கே என் நேரு மகன் அருண் நேரு, பாஜக சார்பில் டிஆர் பாரிவேந்தர் போட்டியினர். இதில் தொடக்கம் முதலே அருண் நேரு முன்னிலையில் இருந்த நிலையில், இப்போது அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் அருண் நேரு (திமுக), என்.டி.சந்திரமோகன் (அதிமுக), டி.ஆர்.பாரிவேந்தர் (பாஜக), தேன்மொழி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

திமுக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா மூன்று முறை எம்பியாக இருந்த தொகுதி இதுவாகும். முன்பு இது தனி தொகுதியாக இருந்த நிலையில், 2009க்கு பிறகு இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றிருந்தார். இப்போது 5 ஆண்டுகள் கழித்து அதே பாரிவேந்தர் இங்கு பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் தமிழக அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு இங்குப் போட்டியிடுகிறார். இந்த பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளும் இப்போது திமுக வசமே உள்ளன. அது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு சாதகமாக இருக்கிறது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் அருண் நேரு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதற்கிடையே இப்போது அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதேநேரம் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட இஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் 3ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். கடந்த தேர்தலில் இதே பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாரிவேந்தர், இந்த முறை அதே 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் அவர் டெபிசாட்டையும் இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
பெரம்பலூர் தொகுதியில் திமுக தான் அதிகபட்சமாக திமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. அங்கு திமுக 8 முறை வென்றுள்ள நிலையில், அதிமுக 6 முறை வென்றுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சி பெரம்பலூர் தொகுதியில் 2 முறை மட்டும் வென்றுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா 1996, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதேபோல நடிகர் நெப்போலியனும் கடந்த 2009இல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்படி திமுக ஆதிக்கம் செலுத்திய தொகுதியான இந்த பெரம்பலூரில் இந்த முறை யார் வெல்வார் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஆ.ராசா (திமுக)- 3,89,708
டாக்டர் எம்.சுந்தரம் (அதிமுக)- 2,36,375
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
நெப்போலியன் (திமுக)- 3,98,742
கே.கே.பாலசுப்ரமணியன் (அதிமுக)- 3,21,138
காமராஜ் துரை (தேமுதிக)- 74,317
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஆர்.பி.மருதராஜா (அதிமுக) - 462,693
எஸ்.சீமானூர் பிரபு (திமுக)- 2,49,645
பாரிவேந்தர் (பாஜக)- 2,38,887
எம். ராஜசேகரன் (காங்கிரஸ்)- 31,998
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
பாரிவேந்தர் (திமுக)- 6,83,697
என்.ஆர்.சிவபதி (அதிமுக)- 2,80,179
சாந்தி (நாம் தமிழர்)- 53,545
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications