ஸ்டிரிக்ட்! சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
பல வீடுகளில் பையன் அடம்பிடிக்கிறானே என விலை உயர்ந்த ரேஸ் பைக்குகளை பெற்றோர்களே வாங்கித் தருவதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த பைக்குகளால் தங்கள் பிள்ளைகளின் உயிருக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என அவர்கள் இன்னு
புதுச்சேரி: 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அதேபோல, புதுவை அரசின் இந்த நடவடிக்கையை பின்பற்றி, மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற கடும் தண்டனைகளை அறிவிக்க வேண்டும் எனவும் பிற மாநில மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அத்துமீறும் சிறார்கள்
புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் தற்போது சிறுவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன. 'ரீல்ஸ்' வீடியோ செய்வதற்காக சாலைகளில் பைக் ஓட்டி சர்க்கஸ் செய்வதும், நண்பர்களுடன் சேர்ந்து பொது இடத்தில் பைக் ரேஸ் நடத்துவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன. சிறார்களின் இந்த அத்துமீறல்களால் அவர்கள் மட்டுமின்றி, சாலைகளில் செல்லும் அப்பாவி பொதுமக்களும் காயம் அடைகிறார்கள். சில நேரங்களில் உயிரிழப்பு வரை இது இட்டுச் சென்றுவிடுகிறது.

கண்டுகொள்ளாத பெற்றோர்
இத்தனை அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வரும் போதிலும், சிறார்களை பைக் ஓட்ட அவர்கள் பெற்றோர் அனுமதிப்பதுதான் பெரிய வேதனையாக உள்ளது. பல வீடுகளில் பையன் அடம்பிடிக்கிறானே என விலை உயர்ந்த ரேஸ் பைக்குகளை பெற்றோர்களே வாங்கித் தருவதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த பைக்குகளால் தங்கள் பிள்ளைகளின் உயிருக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என அவர்கள் இன்னும் உணரவில்லை. மேலும், சிறார்கள் என்பதால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியாத நிலை இருந்ததால்,

அதிரடியில் இறங்கிய போலீஸார்
இந்நிலையில், சிறுவர்களின் இந்த அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது, 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டினால், அவர்களின் பெறறோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

25 வயது வரை..
அதேபோல, அந்த சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் போலீஸார் எச்சரிக்கின்றனர். அதேபோல, புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு முதல்முறை ரூ.1,000 அபதாதம் விதிக்கப்படுவதுடன், 3 மாதக்காலத்திற்கு அவர்களின் ஓட்டுநர் உரிமும் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications