போதையில் உறங்கிய புதுச்சேரி ஆசாமிக்கு.. ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்.. யார் அந்த ஆட்டோ டிரைவர்?
புதுச்சேரி: புதுச்சேரியில் மது போதையில் படுத்திருந்த போதை ஆசாமியிடம் 1.5 சவரன் தங்கச் செயினை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது..
மதுபோதை ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், தவறான நடத்தை உடையவராக மாற்றிவிடும். மது போதை என்பது சுயநினைவை இழக்க செய்யும் விஷத்தை போன்றது. புத்தி தடுமாறும்.. வாய் குளறும், நாம் எங்கு இருக்கிறோம்.. என்ன செய்கிறோம் என்பதையே மறக்கடிக்கும் மோசமான விஷயம்.

மது போதை என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருக்கிறது. திருவள்ளூர் காலத்தில் இருந்தே இருக்கிறது. அவரே கள்ளுண்ணாமை குறித்து திருக்குறள் இயற்றி உள்ளார். மது போதை பல்வேறு வடிவங்களில் மாறிவிட்ட நிலையில், அதனை குடிப்போரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரமாக மது தான் இருக்கிறது.
மதுவால் வரும் வருமானத்தை வைத்து தான் அரசியலே பல இடங்களில் நடக்கிறது. மது அரசியல் என்பது இந்தியாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. அரசாங்கங்கள் நினைத்தால் ஒரே நாளில் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த முடியும் ... ஆனால் அதனை எந்த அரசாங்கம் வந்தாலும் செய்யாது என்பதே கசப்பான உண்மை..
சரி விஷயத்திற்கு வருவோம்.. மதுபோதை ஒருவரின் உடல் நலத்திற்கு மட்டுமல்ல.. அவரது குடும்பத்திற்கே மிகவும் கேடானது.. மது போதை காரணமாக பல குடும்பங்களில் இளம் வயது விதவைகள் இருக்கிறார்கள்.. பல குடும்ப பெண்கள், குடி நோயால் பாதிக்கப்பட்டு கொடுமை செய்த கணவனை ஆத்திரத்தில் கொன்றுவிட்டு சிறையில் இருக்கிறார்கள். பல பெண்கள் குடிவெறி கொண்ட கணவனால், உயிரிழந்திருக்கிறார்கள்..
சரியாக வேலைக்கு போகாமல், சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்துவிட்டு, பிள்ளைகளை பற்றி கவலைப்படாமல் சுற்றுகிறார் பலர். கூலித்தொழிலாளர்கள் பலரது வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி வருவது எது என்று கேட்டால் அது மதுபானம் தான்..
மது குடித்தவர்கள் போதை அதிகமாகி சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர தெரியாமல் நடுரோட்டில் படுத்துகிடப்பார்கள்.. சில நேரங்களில் குடித்துவிட்டு நடந்து கூட போக முடியாமல் சாக்கடையில் விழுந்து கிடப்பார்கள். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்றாலும், ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வரும் சக்தி மதுபானத்திற்கு உண்டு. எவ்வளவு புகழ் பெற்றவர்களையும் ஒரே நாளில் சாக்கடையை விட மோசமானவர்களாக சித்தரிக்க மதுபானத்தால் முடியும்..
இந்த சூழலில் புதுச்சேரியில் மது போதையில் படுத்திருந்த போதை ஆசாமியிடம் 1.5 சவரன் தங்கச் செயினை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மது போதையில் படுத்திருந்த நபரிடம் மெதுவாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஒன்றும் தெரியாதது போல் பக்கத்தில் சென்று, அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை வேகமாக பறிக்கிறார். பின்னர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் செல்கிறார். இதனை பார்த்த போதை ஆசாமி வேகமாக எழுந்து பார்க்கிறார்.. ஆனால் அவர் தங்க செயினை பறிகொடுத்துவிடுகிறார்.. இப்படியாக சிசிடிவி வீடியோ காட்சி உள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்...
-
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications