புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்திலும் பரவியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

எல்லைகளில் 24 மணி நேரமும் போலீசார், மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு வரும் வாகனங்கள், அவசர தேவைக்காக வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறார்கள்.
மருத்துவ பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரியில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.

மேலும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேர் மட்டுமே ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் வசிக்கும் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications