புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யோசனை மஞ்சுவாண்டுதான்.. மண்பானை ஹெல்மெட்டுடன் போராட்டம்.. வேறு யாரை.. கிரண் பேடியை எதிர்த்துதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    கிரண் பேடியை எதிர்த்து மண்பானை ஹெல்மெட்டுடன் போராட்டம்

    புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பலமாதங்களாக ஊதியம் வழங்காததால், ஹெல்மெட் வாங்க காசு இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தலையில் மண்சட்டி அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் முதல்முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 300 ரூபாயும், மூன்றாவது முறையும் ஹெல்மெட் அணியாமல் சென்றால், 3 மாதத்திற்கு தற்காலிகமாக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்றுமுதல் அபராதமும் வசூலித்து வருகின்றனர்.

    helmet issue govt staffs protest

    இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 5 மாதம் முதல் 50 மாதம் வரை ஊதியம் வழங்காததால், ஹெல்மெட் வாங்க காசு இல்லை எனக்கூறி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கொக்கு பார்க் அருகே தலையில் மண்சட்டி அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    helmet issue govt staffs protest

    மேலும் அரசு உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மண்சட்டி அணிந்தவாறே நகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

    helmet issue govt staffs protest

    கிரண் பேடி கிழக்கில் போனால் இவர்கள் மேற்கில் போகிறார்களே.. என்னவோ போங்கப்பா

    English summary
    Hundreds of Puducheery govt workers staged a novel protest against Lt Governor Kiran bedi with mut pot helmets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X