“சூத்திரன்” சர்ச்சை.. ஆ.ராசாவை விடாத இந்துத்துவ அமைப்புகள்! இன்று புதுச்சேரியில் “ஸ்ட்ரைக்”
புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

தனித் தமிழ்நாடு
விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கடும் எதிர்ப்பு
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. காவல்நிலையத்திலும் ஆ.ராசா மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரியில் ஸ்ட்ரைக்
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு ஆதரவளிக்கும்படி வணிகர் சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், வாகன போக்குவரத்து சங்கங்களிடம் இந்து முன்னணி ஆதரவு திரட்டியது. இதில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications