“நான் புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் இல்லை.. கட்சி வேலைக்காகவே தலைமை அனுப்பியுள்ளது” - ஜெகத்ரட்சகன்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: "திமுக ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும். புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் நான் இல்லை. என்னை இங்கு கட்சி வேலைக்காக மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறது தலைமை. " என்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். பயிற்சி கூட்டத்தை திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி தொடங்கி வைத்தார். தமிழக தொழில் துறை அமைச்சரும், திமுக ஐ.டி விங் மாநில செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

dmk puducherry Jagathrakshakan

திமுக தலைமையால் அனுப்பப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் காணொலி வாயிலாக பயிற்சி அளித்தனர். இந்தக் பயிற்சி கூட்டத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளை சேர்ந்த தொகுதி செயலாளர்கள் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் 800 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெத்ரட்சகன் எம்.பி பேசுகையில், "புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். தமிழகத்தில் திமுக தலைவர் பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் இந்தியா வருகின்றனர். தொழில் தொடங்க தமிழகம் தான் வருகை தருகின்றனர்.

1954-க்கு முன்பு புதுச்சேரி ஒரு மாநிலம் அல்ல, நாடாக இருந்தது. அந்த நாடு தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் திராவிட நாடு, இங்கு புதுச்சேரியில் ஒரு நாடு என இருந்திருக்கும். இங்கு செம்மைப்படுத்த ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இங்கு முதல்வர் நாற்காலி உடைந்துவிட்டால் கூட அதனை சரிசெய்ய டெல்லி செல்ல வேண்டும். மாநில அந்தஸ்து பெற வேண்டும். அதனை பெறுவது திமுக ஆட்சியால் தான் முடியும்.

நான்கரை ஆண்டு காலமாக தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு நிதியும் கிடைக்கவில்லை. ஆனாலும் திமுக தலைவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் மூலம் எல்லா வாய்ப்பையும் உருவாக்கி தந்து கொண்டிருக்கின்றார். அதேபோன்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி நாமும் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை வாங்கி தருவதுதான் திமுகவின் முதல் கொள்கை.

இங்கு முதல்வராக, எம்எல்ஏவாக இருந்தாலும் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. எங்கோ இருப்பவரை துணைநிலை ஆளுநராக அமர வைத்து பல்வேறு அதிகாரத்தை அவருக்கு தருகிறார்கள். புதுச்சேரிக்கு ரூ.1,200 கோடி கேட்டோம், ரூ.62 கோடி தான் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட அவல நிலையை மாற்ற, புதுச்சேரி மக்களின் நலனை பாதுகாக்க இந்த தேர்தல் களத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும். திமுகவின் கோட்டை என்றுமே புதுச்சேரி தான்" என்று பேசினார்.

அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-வினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் புதுச்சேரி நிலவரத்தை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார். திமுகவை இங்கேயும் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளையும் எங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்.

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி நூற்றுக்கு இருநூறு சதவீதம் அமையும். ஆனால் அந்த ஆட்சி திமுக தலைமையில் இருக்குமா என்பதை எங்கள் தலைவர் முடிவெடுப்பார். நான் புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் இல்லை. என்னை இங்கு கட்சி வேலைக்காக மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறது தலைமை. நான் என்னுடைய பணியைச் செய்கிறேன். அவ்வளவே." எனத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் தனது புதுச்சேரி பிரச்சாரத்தின் போது "திமுக நம்ப வைத்து ஏமாற்றும்" என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். 16 சதவீத வளர்ச்சியை திமுக தலைவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இதை மத்திய அரசே தெரிவித்துள்ளது. இந்த ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும். எங்களுக்கு ஆக்கபூர்வமாகப் பேசித்தான் பழக்கம். வெறுமனே அரசியல் பேசுவது வீண். விஜய் வெற்று அரசியல் பேசுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+