அமாவாசைக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது! வில்லங்கமான மைக்! திகைத்துப் போன அமைச்சர் மீனாட்சி லேகி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி முன்னிலையில், பாஜக மாநிலத் தலைவருடன் நிர்வாகி ஒருவர் காரசாரமாக வாக்குவாதம் செய்த நிகழ்வு அவரை திகைப்படைய வைத்தது.
இந்த நிகழ்வால் தாம் பேச வந்ததையே சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு அப்செட் ஆனார் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி.
பாஜக நிர்வாகி அமாவாசை என்பவர், மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகியின் உரையை மொழிபெயர்ப்பதாக கூறி மைக்கை பிடித்ததே இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமாக கூறப்படுகிறது.

புதுச்சேரி பயணம்
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கவும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தவும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி நேற்று மாலை புதுச்சேரி சென்றடைந்தார். அங்கு மண்ணாடிப்பட்டு தொகுதியில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பாஜக நிர்வாகி
அப்போது ஆங்கிலத்தில் பேசவா, இல்லை தெலுங்கில் பேசவா என மக்களிடம் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி கேட்டிருக்கிறார். இதனிடையே நீங்கள் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், நான் மொழி பெயர்க்கிறேன் எனக் கூறி வேகமாக மைக்கை வாங்கியுள்ளார் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அமாவாசை. சிறிது நேரத்திலேயே மீனாட்சி லேகியின் மைக் வேலை செய்யவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கடும் வாக்குவாதம்
இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் ஏதோ கேட்டிருக்கிறார். இதனால் ரோஷப்பட்ட பாஜக நிர்வாகி அமாவாசை, மைக்கை டேபிளில் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட முற்பட்டிருக்கிறார். மேலும், வாக்குவாதமும் அங்கு நடந்திருக்கிறது. பிறகு நமச்சிவாயம் உட்பட முன்னணி நிர்வாகிகள் சிலர் இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

களேபரத்துக்கு மத்தியில்
இதனை அதிர்ச்சியுடன் கண்ட மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, என்ன பேச வந்தோம் என்பதையே மறந்து சிறிது நேரம் திகைப்படைந்து நின்றார். இதனிடையே இவ்வளவு களேபரத்திற்கு மத்தியில் காவி வேட்டி காவி சட்டை அணிந்த பாஜக தொண்டர் ஒருவர், மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகிக்கு சால்வை ஒன்றை பரிசளித்து தன்னைப் பற்றி சுய அறிமுகம் செய்துக்கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications