அப்படியே ஐபிஎல் போட்டியை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு.. பாண்டிச்சேரி ரசிகர்கள் குஷி!
புதுச்சேரி : சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடெல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை புதுச்சேரியில் பிசிசிஐ நிர்வாகம் பெரிய திரையில் ஒளிபரப்பியது. இதனை ஏராளமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
பிசிசிஐ கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை பெரிய திரையில் ஒளிபரப்பி வருகிறது.

ஐபில் ஃபேன்ஸ் பார்க்
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை ரசிகர்கள் பார்ப்பதற்காக 21 மாநிலங்களில், 36 நகரங்களை தேர்வு செய்து ஐபில் ஃபேன்ஸ் பார்க் என்ற பெயரில் மிகப்பெரிய மைதானத்தில் பெரிய திரையில் ஐபிஎல் போட்டியை காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

பெரிய திரை
இந்நிலையில் புதுச்சேரியில் முதல்முறையாக இன்று (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடெல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை கருவடிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பினர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
பெரிய திரையில் கிரிக்கெட் போட்டியினை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் மைதானத்திற்கு வருகை புரிந்து ஆர்வத்துடன் ஐபிஎல் போட்டியை கண்டு களித்தனர். மேலும் இரு அணி வீரர்களும் ரன்கள் எடுக்கும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் ரசிகர்கள் விசில் அடித்தும், கைகளை உயர்த்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
அதேபோல் பெரிய திரையில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது மைதானத்திற்கே நேரடியாக சென்று போட்டிகளை பார்த்த அனுபவத்தை தருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications