புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டாம்பூச்சி விளைவா? புதுச்சேரிக்கு வந்த பீகார் காற்று! பட்ஜெட்டை தடுத்த பாஜக! ரங்கசாமி அதிர்ச்சி?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த வருடமும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் தடை பட்டுள்ளது. சரி பாஜக கூட்டணி ஆட்சி தானே நடக்கிறது.. இந்த முறையாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டால் பட்ஜெட் மீண்டும் தடைபெற்றுள்ளது.

Recommended Video

    பீகாரைத் தொடர்ந்து புதுச்சேரி: BJPக்கு அடுத்த செக்? Politics Today With Jailany

    எங்கோ.. எதோ ஒரு தீவில் பட்டாம்பூச்சி ஒன்று தனது சிறகுகளை அசைப்பதால்.. பூமியில் வேறு ஒரு இடத்தில் புயல் கூட ஏற்படும் என்று கூறுவார்கள். பட்டாம்பூச்சி ஏற்படுத்திய அதிர்வு அப்படியே பெரிதாகி பெரிதாகி எங்கேயோ புயலை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.. இதைத்தான் ஆங்கிலத்தில் Butterfly Effect என்றும் தமிழில் பட்டாம்பூச்சி விளைவு என்றும் கூறுவார்கள்.

    இந்திய அரசியலில் இந்த விளைவுதான் தற்போது ஏற்பட்டு உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை பாஜக கவிழ்த்தது.

    உத்தவை காலி செய்துவிட்டு அவரின் கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் உதவியுடன் சிவசேனாவை உடைத்து பாஜக தனியாக ஆட்சி அமைத்தது. இது இந்தியா முழுக்க உள்ள பாஜகவின் கூட்டணி கட்சிகளை அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்

    பீகார்

    பீகார்

    இந்த மோதல் ஏற்படுத்திய அலை பீகாரில் நேற்று எதிரொலித்தது. உத்தவ் தாக்கரே போல நம்மையும் பாஜக காலி செய்துவிட கூடாது என்று அஞ்சிய நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துள்ளார். ஷிண்டே போல முன்னாள் அமைச்சர் ஆர்சிபி சிங்கை வைத்து தன்னை பாஜக சாய்க்க விரும்புவதாக அஞ்சிய நிதிஷ் குமார் பாஜகவை கழற்றிவிட்டுள்ளார். அங்கு நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

    கூட்டணி முறிவு

    கூட்டணி முறிவு

    இந்த கூட்டணி முறிந்த போதே இந்தியா முழுக்க வேறு மாநிலங்களில் உள்ள பாஜக கூட்டணியும் முறியுமா என்ற விவாதம் எழுந்தது. பட்டாம்பூச்சி விளைவு போல மகாராஷ்டிரா அலை பீகார் சென்று.. பின்னர் வேறு மாநிலத்திற்கும் செல்லுமோ என்ற விவாதம் எழுந்தது. முக்கியமாக புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணியை முறிக்க போகிறதா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த சந்தேகத்தை பெரிதாக்கும் வகையில் புதுச்சேரியில் அரசியல் மோதல் ஒன்று நடந்துள்ளது.

    புதுச்சேரி அரசியல்

    புதுச்சேரி அரசியல்

    புதுச்சேரியில் இந்த வருடமும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் தடை பட்டுள்ளது. அங்கு முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இன்று தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உரை மட்டுமே அங்கு நடந்தது. சரி பாஜக கூட்டணி ஆட்சி தானே நடக்கிறது.. இந்த முறையாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டால் பட்ஜெட் மீண்டும் தடைபெற்றுள்ளது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    சரியாக புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வருட பட்ஜெட் சுமார் 11 ஆயிரம் கோடிக்கு இருக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழசை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டிற்கு எப்படியாவது அனுமதி வாங்க வேண்டும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூட நேரடியாக டெல்லிக்கு சென்று இருந்தார்.

     பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட இவர் சந்தித்தார். இதில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி உதவி தர வேண்டும், 2000 கோடியை பட்ஜெட் தாக்கல் செய்ய கொடுக்க வேண்டும், மாநில அந்தஸ்து கொடுக்க உதவ வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்தார் ரங்கசாமி. ஆனாலும் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் மீண்டும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே புதுச்சேரியில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ரங்கசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இப்போது பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

    English summary
    Is NR Congress rifting with BJP in Puducherry? : Union says no for the Rangasamy budget . புதுச்சேரியில் இந்த வருடமும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் தடை பட்டுள்ளது. சரி பாஜக கூட்டணி ஆட்சி தானே நடக்கிறது.. இந்த முறையாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டால் பட்ஜெட் மீண்டும் தடைபெற்றுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X