மாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான மீன் வியாபாரியை சதுப்புநிலக் காடுகளில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மீன் வியாபாரி செய்துவருகிறார். இவர் தினமும் தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து கோரிமேடு பகுதியில் வியாபாரம் செய்து வந்தார்.
அதே போன்று நேற்று காலையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றவர் மாயமானார். மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரது உடைகள் மீன் பிடித்துறைமுகம் செல்லும் சாலை அருகே கிடந்தது.

மோப்ப நாய்களுடன் தேடுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இருப்பினும் எங்கு தேடியும் கணேசன் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
கிண்டியில் நடுரோட்டில் கொடூரம்.. பெண்ணை கொன்ற இளைஞர்.. கொலைகாரன் மாயம்.. இதுதான் பின்னணி!

கொலையா
கணேசன் மீன் வாங்க வரும் போது ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கொண்டு வருவது வழக்கம். ஆகவே பணத்திற்காக யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

டிஐஜி உத்தரவு
இந்த நிலையில் மக்கள் அதிக நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது குறித்து தீவிர விசாரணைக்கு காவல்துறை டிஐஜி உத்தரவிட்டார்.

டிரோன் மூலம் தேடுதல்
இதனையடுத்து கணேசன் மாயமான இடத்தை சுற்றி 2 கி.மீ சுற்றுலவு தூரம் வரையில் சதுப்பு நில காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அப்பகுதியில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மீன் வியாபாரி மாயமாகியுள்ள சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.