கையில் சூலம்.. பிரம்மாண்ட உருவத்துடன் தரிசனம்..நித்யானந்தாவா? கால பைரவரா? - புதுச்சேரி கலாட்டா

புதுச்சேரி அருகே நித்தியானந்தாவிற்கு 18 அடி உயரத்தில் சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கையில் சூலத்துடன் பிரம்மாண்டமாக 18 அடி உயரத்தில் நித்யானந்தா போல வடிவமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதுச்சேரியில் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் கட்டியுள்ள முருகன் கோவிலில் நித்யானந்தாவிற்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல சர்ச்சைகளில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. பாலியல் புகாரில் சிக்கி சிறை செல்ல இருந்த நிலையில் வெளிநாடு தப்பினார்.

கைலாசா என்ற நாட்டையும் அவரே அதிபராகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். கடவுளைப் போல அலங்காரம் செய்து கொண்டு தினம் தினம் சத்சங்கம் செய்து வந்தார். ஏராளமான சிஷ்யைகளுடன் கைலாசாவில் செட்டில் ஆகிவிட்டார் நித்யானந்தா.

நித்யானந்தா கோவில்

நித்யானந்தா கோவில்

நித்யானந்தாவை பற்றிய சமீபத்திய செய்திகளைப் பார்த்தால் அவர் சமாதி நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. தினம் தினம் ஒரு தகவல்கள் கைலாசாவில் இருந்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
நித்யானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட கோவில்

பிரம்மாண்ட கோவில்

புதுச்சேரி குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கையில் சூலத்துடன்

கையில் சூலத்துடன்

இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 காலபைரவர் சிலை

காலபைரவர் சிலை

நித்யானந்தா சாமியார்தான் சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினர்.

நித்யானந்தாவின் சீடர்

நித்யானந்தாவின் சீடர்

பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. நித்யானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா போல சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+