புதுவையில் புசுபுசு பெர்சியன் பூனை திருட்டு.. விஜய்யின் மாஸ்டர் படத்தின் தாக்கமா?
புதுவை: புதுச்சேரியில் விலை உயர்ந்த பெர்ஷியன் ரக பூனையை திருடிவிட்டு அந்த காட்சிகள் வீடியோவாக பரவியதை அடுத்து ஒரு கடை வாசலில் பூனையை விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே ஜெயக்குமார் என்பவர் பெட் ஷாப் வைத்துள்ளார். இவரது கடையில் புறா, வண்ண மீன்கள், நாய்கள், பல ரக பூனைகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.
18 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கடைக்கு வந்த 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, மீன்கள் குறித்து விவரங்களை கேட்டனர். அப்போது அங்கு புசுபுசுவென பூனை ஒன்று அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருந்தது.

பூனையின் விலை
அதை பார்த்த அவர்கள் இந்த பூனை என்ன விலை என கேட்டுள்ளனர். அதற்கு ஜெயக்குமார், அதன் விலையை கூறினாராம். விலையை கேட்டு தலைச்சுற்றி போன அந்த மூவரும் ஜாலியாக பேசிக் கொண்டே அந்த கடைக்காரரிடம் விசிட்டிங் கார்டு கேட்டுள்ளனர்.

விசிட்டிங் கார்டு
ஜெயக்குமார் விசிட்டிங் கார்டை எடுக்கும் நேரத்தில் மூன்று பேரில் இருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து உட்கார்ந்தனர். கடையில் பூனையுடன் இருந்த மற்றொரு நபர், பூனையை தூக்கிக் கொண்டு அந்த பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து ஜெயக்குமார் போலீஸில் புகார் அளித்தார்.

பெர்சியன் கேட்
மேலும் தனது கடையில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் இணையதளத்தில் பகிர்ந்தார். பூனையை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விடுங்கள் என நெட்டிசன்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த காட்சிகள் வைரலானதால் அச்சமடைந்த பூனையை திருடிச் சென்ற நபர்கள் மீண்டும் அந்த கடையின் வாசலில் கொண்டு வந்துவிட்டனர்.

மாஸ்டர் திரைப்படம்
இந்த பூனையின் ரகத்தின் பெயர் பெர்சியன் கேட் ஆகும். இந்த பூனை புசுபுசுவென பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வட்ட வடிவத்தில் குண்டு முகமாக இருக்கும். இந்த பூனை ரகம் ஒன்று மாஸ்டர் படத்தில் நடித்திருந்தது. அந்த படத்தில் விஜய் பெர்சியன் பூனையை வளர்ப்பது போல் காட்சிகள் அமைந்திருக்கும். இதனால் இந்த பூனை விஜய் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பாரசீக பூனை
இதனால் ரசிகர்களும் இந்த பூனையை வாங்க அவ்வப்போது பெட் ஷாப்புகளுக்கு சென்று வருகிறார்கள். இதற்கு இன்னொரு பெயர் பெர்சியன் லாங் ஹேர் கேட் ஆகும். இது 1620 ஆம் ஆண்டுகளில் பாரசீகத்திலிருந்து (பெர்சியா) இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு பெர்சியன் பூனைகளை ஆங்கிலேயர்கள் குறிப்பாக அமெரிக்கர்கள் வாங்கி வளர்த்து வந்தனர்.

அமெரிக்கா
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேட் ஃபேன்சியர்ஸ் அசோசியேஷனின் கருத்து கணிப்பின்படி உலகின் 4ஆவது மிகவும் பிரசித்தி பெற்ற பூனை ரகம் என்றால் அது பெர்சியன் கேட்கள் என வரிசைப்படுத்தியுள்ளது. இந்த பூனைகள் மிகவும் சாதுவானவை. பெரிய பூனை ரூ 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. குட்டி பூனையின் மதிப்பு ரூ 15 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் ஆகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications