கொரோனா: 2-வது முறையாக புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு ஒரு சதவீதம் வரி ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது முறையாக நாளை முதல் வரி கடுமையாக உயர்த்தப்படுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை உயருகிறது. இது மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று நிதித்துறை செயலர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

Petrol and diesel price increase in Puducherry

அதனால் சுகாதாரத் துறைக்காக என குறிப்பிட்டு, புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது.

Petrol and diesel price increase in Puducherry

இச்சூழலில் மீண்டும் பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை முதல் உயர்த்துகிறது. புதுச்சேரி காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 5.85 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதமாகிறது. டீசல் மீது 3.65 சதவீதம் உயர்த்தப்பட்டு, 21.8 சதவீதமாகிறது.

Petrol and diesel price increase in Puducherry

மாஹேயில் பெட்ரோல் வரி 23.9 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 1.75 ஆகும். டீசல் மீதான வரி உயர்வில்லை.

Petrol and diesel price increase in Puducherry

ஏனாமில் பெட்ரோல் மீதான வரி 25.7 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 3.55 ஆகும். டீசல் வரி 20 சதவீதமாகிறது. அதன் உயர்வு 1.85 ஆகும். இவ்வரி உயர்வு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

Petrol and diesel price increase in Puducherry

வரி உயர்வினால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ,2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+