இன்னுமாப்பா தடுப்பூசின்னா பயம்? தப்பியோடி மரத்தில் ஏறிய இளைஞர்.. விரட்டி ஓடிய சுகாதார துறை ஊழியர்கள்
புதுவை: புதுச்சேரி அருகே கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமவாசி ஒருவர் மரத்தில் ஏறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா சங்கிலி இன்னும் உடைபடாததால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் ஓமிக்ரான் வேறு பரவி வருவதால் அதற்கென 3ஆவது பூஸ்டர் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதனால் மாவட்ட நிர்வாகத்தினரும் அந்தந்த மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய போராடி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் ஆற்றை கடந்து கற்கள் முட்கள் உள்ள சாலையை தாண்டி மிகவும் கடினமான சூழலில் தடுப்பூசிகளை சுகாதாரத் துறை செலுத்தி வருகிறது.

தடுப்பூசி
மலைவாழ் கிராமங்களில் தடுப்பூசி போட செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் காடு, மேடு, வயல், வரப்புகளை தாண்டி சென்று ஒரு சிறிய கிராமத்தில் கூட கொரோனாவோ ஓமிக்ரானோ வரக் கூடாது என்பதுதான் சுகாதாரத் துறையின் எண்ணமாக இருக்கிறது. இப்படி ரிஸ்க் எடுத்து இவர்கள் போனாலும் ஊசி போட்டுக் கொள்ள சிலர் அடம் பிடிப்பதையும் செய்திகளில் அறிகிறோம்.

மரத்தில் ஏறிய நபர்
இந்த நிலையில் புதுவையில் தடுப்பூசி போட சென்ற போது இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறிக் கொண்ட காட்சி வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரதுறை சார்பில் பல்வேறு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

வில்லியனூர்
மேலும் நகர மற்றும் கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவற்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் கிராம பகுதியில் செவிலியர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி பயந்து
அப்போது அங்கிருந்த ஒரு வீட்டிற்கு தடுப்பூசி செலுத்த போது அந்த வீட்டில் வசித்த நபர் தடுப்பூசிக்கு பயந்து வீட்டின் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். தடுப்பூசி செலுத்த வந்த சுகாதார பணியாளர் நீண்ட நேரம் அவரை சமாதானபடுத்தி கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் கீழே வராததால் சுகாதார பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர். தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேலே ஏறிய நபரின் செயலை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications