புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரி: நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு-நான் ராஜினாமா செய்யவே இல்லை- ஆடியோ வெளியிட்ட விஜயவேணி எம்எல்ஏ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தாம் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்து விஜயவேணி எம்.எல்.ஏ. ஆடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    புதுச்சேரி: நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு-நான் ராஜினாமா செய்யவே இல்லை- ஆடியோ வெளியிட்ட விஜயவேணி எம்எல்ஏ

    புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு கொடுத்தனர். இதனையடுத்து

    புதுச்சேரி மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்காக புதுவை சட்டசபை நாளை கூடுகிறது.

    நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க முடியும்?

    நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க முடியும்?

    இதனிடையே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்கள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியுமா? என்கிற காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு தகவல் புதுச்சேரி அரசியலில் நள்ளிரவில் பரபரப்பை கிளப்பியது.

    விஜயவேணி எம்.எல்.ஏ. ராஜினாமாவா?

    விஜயவேணி எம்.எல்.ஏ. ராஜினாமாவா?

    ஏற்கனவே விஜயவேணி உள்ளிட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முயற்சித்ததாகவும் அவர்களை முதல்வர் நாராயணசாமி சமாதானப்படுத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் விஜயவேணி உண்மையிலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா? என்கிற கேள்வி எழுந்தது. இருப்பினும் இப்படி ஒரு தகவலை எதிர்க்கட்சிகள்தான் பரப்பி விடுகின்றன என்கிறது காங்கிரஸ் தரப்பு.

    விஜயவேணி ஆடியோ

    விஜயவேணி ஆடியோ

    அத்துடன் விஜயவேணி எம்.எல்.ஏ. ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே இல்லை. காங்கிரஸ் தலைமைக்கு எப்போதும் விசுவாசமாகவே இருப்பேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Puducherry CM Narayansamy to prove majority in Assembly on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X