புதுவை சிறுமியின் உள்ளுறுப்பில் தையல்.. பிரேத பரிசோதனையில் பகீர்! பால் பற்கள் கூட விழுந்திருக்காதே!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதிலும் குழந்தையின் உள்ளுறுப்பில் அதிக காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Puducherry Girl murder case Post Mordem report says she was molested

கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.

போலீஸில் புகார்: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்றைய தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

100 மீட்டர் தொலைவில் கால்வாய்: இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த உடலை கண்டதுமே அங்கிருந்த மக்களின் நெஞ்சே வெடித்த நிலையில் இருந்தது. பெற்றோர் கதறி துடித்துவிட்டனர். இதையடுத்து அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மேலும் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டதாகவும் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அழுகிய உடல்: கால்வாயில் இருந்த சிறுமியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தண்ணீரிலேயே இருந்ததால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாக்கு மூட்டையிலிருந்து குழந்தையை எடுத்தவுடன் பெற்றோர்கள் கதறியபடியே தங்கள் குழந்தைதான் என அடையாளம் காட்டினர்.

சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறி இரு கயவர்களும் அழைத்து சென்றாக கூறப்படுகிறது. 9 வயது சிறுமி என்பதால் அவருக்கு பால் பற்கள் விழும் வயது. அப்படிப்பட்ட பால் மனம் மாறாத பச்சை குழந்தையை சீரழிக்க அந்த கயவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை: அந்த சிறுமிக்கு 2 மணி நேரமாக பிரேத பரிசோதனை நடந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்களும் உறவினர்களும் கூறி வருகிறார்கள். சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை, புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு முதல்வர் ஏதேனும் உத்தரவாதங்களை கொடுத்தவுடன் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுமா இல்லை இந்த போராட்டம் தொடருமா என்பது தெரியவரும். சிறுமி கொலையில் கைதான கருணாஸ் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+