சாலையின் ஒரு பக்கம் கடைகள் திறப்பு.. மறுபக்கம் அடைப்பு.. புதுச்சேரி-தமிழக எல்லையில் இந்த காட்சி .
புதுச்சேரி: புதுச்சேரி தமிழக எல்லையில் ஒருபக்கம் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் அடைக்கப்பட்டிருந்தது. அதாவது சாலையின் ஒரு பக்கம் புதுச்சேரி லேசான ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கமான தமிழக பகுதியில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருக்கனூர் கிராமம். இந்த கிராமம் தான் புதுச்சேரி தமிழக எல்லை கிராமம் ஆகும்.

திருக்கனூர் கிராமத்தில் சாலையின் ஒரு பக்கம் புதுச்சேரி மாநிலமாகவும், சாலையின் மறுபக்கம் தமிழகம் என்றும் உள்ளது. சாலையில் ஒரு பக்கம் உள்ளது திருக்கனூர், இது புதுச்சேரி நிலப்பரப்பில் உள்ள கிராமம் ஆகும். சாலையின் மறுபக்கம் உள்ளது சித்தலம்பட்டு பகுதி. இது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்ததாகவும்
உள்ளது.

புதுச்சேரியில் லேசான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் 24ம் தேதி தொடங்கிய கடும் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் எதையும் திறக்க அனுமதி இல்லை,.

இதன் காரணமாக சாலையின் ஒருபக்கம் உள்ள (சித்தலம்பட்டு) தமிழக பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் சாலையின் மறு பக்கம் புதுச்சேரியில் லேசான ஊரடங்கு என்பதால் (திருக்கனூர்) கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன. இந்த காட்சிகள் சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications