புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என். ரங்கசாமி - பதவிபிரமாணம் செய்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நான்காவது முறையாக புதுச்சேரி முதல்வராக பதவியேற்றுள்ளார் ரங்கசாமி.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதில் என். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். புதிய ஆட்சி அமைப்பதற்காக கடந்த 3ஆம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரை சந்தித்தனர்.
அப்போது என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜெயபால், கட்சி நிர்வாகி பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து மே 7ஆம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பதற்கான கடிதத்தை வழங்கினர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கடற்கரை காந்தி திடலில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற எளிய விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் 20வது முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார்.
ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. நான்காவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார் ரங்கசாமி.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications