ரஜினி பேச்சை கேட்டா.. இல.கணேசன் மட்டும் எப்படி கண்டுபிடிச்சு தூக்கறார் பாருங்க!
புதுச்சேரி: நடிகர் ரஜினியின் கருத்து அப்படியே பாஜகவின் கொள்கையோடு ஒத்துப்போகிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் புதுச்சேரியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினி பேச்சை வைத்து இப்போது அவரது ரசிகர்களும் பாஜகவினரும் தத்தமது கொள்கைக்கு ஏற்பட முட்டுக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். முரட்டு விளக்கமும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தலைவர் புதிய பாதைக்கு மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளார். எதிரிகளும் இதைப் பாராட்டுகிறார்கள் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம், பாஜகவின் இல.கணேசன் மட்டும் தனியாக ஒரு முட்டு கொடுத்துள்ளார்.

இல. கணேசன்
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜகவில் அமைப்புக்கு என ஒரு பிரிவும், ஆட்சிக்கு என ஒரு பிரிவின் கீழ் இயங்கி வருகிறது. மேலும் பாஜகவில் இரு பிரிவு உள்ளதுபோல் நடிகர் ரஜினிக்கும் அதே திட்டம் இருக்கலாம் .

இது ரஜினி ஸ்டைல்
இந்தத் திட்டத்தைத்தான் தனது பேச்சின் மூலம் நேற்று அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதுபோன்ற ஒரு திட்டம் ரஜினிக்கு இருந்தால் அது நல்லது. அமைப்பு ரீதியாக செயல்படுபவர்கள் சமுதாயத்தில் பிரபலமாக மாட்டார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் தான் பிரபலம் ஆவார்கள். ஆனால் பிரபலமானவர் ரஜினி. நல்ல எண்ணத்தில் சொல்லியிருக்கிறார். அவர் கட்சி ஆரம்பித்த பின்பு அவரது நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம் என்றார்.

ரஜினியுடன் பாஜகவுக்கு நல்ல நட்பு
பாஜக தலைவர்களோடு ரஜினிக்கு நல்ல நட்பு உள்ளது. ஆனால் இப்போது அவர் ஆரம்பிக்க போகும் கட்சிக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரே கூறி விட்டார். பாஜக புதிய தலைவர் முருகன் திறமையானவர், அவரால் பாஜக மீண்டும் வளர்ச்சிபெறும். பாஜக தலைவர் ரேசில் நான் இல்லை. அதனால் பாஜக தலைவர் தேர்வில் நான் திருப்தியாக இருக்கிறேன் என்றார்.

மாற்றிப் பேசுவாரா
இதற்கிடையே, ரஜினிகாந்த் ஏன் இப்படிப் பேசினார் என்று ஒரு டாக் ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் மனதையும், மக்கள் மனதையம் ஆழம் பார்க்கவே ரஜினி இவ்வாறு பேசினார். நாளையே அவர் வேறு மாதிரி பேசலாம் என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது. ஆக மொத்தம் ரஜினியின் பேச்சை வைத்து ஆளாளுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?











Click it and Unblock the Notifications