விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி
புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம் என்று அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவனின் இந்த கருத்துக்கு பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் - திமுக - விசிக கூட்டணி அமைத்துள்ளன.

காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் களமிறங்குகிறது. இந்த கூட்டணியில் திமுகவுக்கு 14 தொகுதிகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு தொகுதியை விசிகவிற்கு திமுக விட்டு கொடுத்தது.
இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உழவர்கரை தொகுதியில் போட்டியிடுகிறது. இருப்பினும் கூட்டணியில் குழப்பம் நிலவியதால் விசிகவினர் கூடுதலாக 3 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் உள்ளிட்ட தொகுதிகளில் விசிகவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் தேதி முடிவடைந்துவிட்டதால் இந்த 3 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் உள்ளனர்.
திருமாவளவன் பேட்டி
இந்நிலையில் தான் உழவர்கரை தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் செல்வபுஷ்பலதாவை ஆதரித்து திருமாவளவன் இன்று பிரசாரத்துக்கு சென்றார். அங்கு திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உழவர்கரையில் மட்டும் விசிக வேட்பாளர் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பது இல்லை
மற்ற இடங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணியை சேர்ந்தவர்களின் வெற்றிக்கு உழைப்பது, பாடுபடுவது, வாக்கு சேகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்ப பெறாவிட்டாலும் கூட நாங்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது இல்லை. மாறாக காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது, அவர்களின் வெற்றிக்காக உழைப்பது என்ற முடிவை எடுத்தோம். எடுத்து இருக்கிறோம்.
உழவர்கரையில் மட்டும்..
அதேபோல் திமுகவிற்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களும் திமுக வேட்பாளர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று நான் விசிகவின் வேட்பாளர் செல்வபுஷ்பலதா போட்டியிடும் உழவர்கரை தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறேன்'' என்றார். இதன்மூலம் ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் தொகுதிகளில் விசிக வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications